• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டுக்காக திரைப்படத்தை ஒதுக்கித் தள்ளிய சிவாஜி.. 

சினிமா

நாட்டுக்காக திரைப்படத்தை ஒதுக்கித் தள்ளிய சிவாஜி.. சினிமாத்துறைக்கு ஷாக் கொடுத்த சிவாஜி கணேசனின் சம்பவம்!

1966 இல், அன்றைய சோவித் யூனியனின் தலையீட்டால் இந்தியா - பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டுவர தாஷ்கண்ட் ஒப்பந்தம் போடப்பட்டது. அதற்கு முன், போருக்காக அன்றைய இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நிதி திரட்டினார். சமூக சேவகி ராஜி ரங்கராச்சாரி இயக்குனர் சி.வி.ஸ்ரீதரை அணுகி, திரையுலகினரை ஒன்றிணைத்து நிதி திரட்டலாம் என்று கூற, அந்த விஷயத்தை சிவாஜியின் காதுகளுக்கு எடுத்துச் சென்றார் ஸ்ரீதர். தேசம் என்றால் துள்ளி எழும் சிவாஜி, எதிர்பார்த்தது போல் படுஉற்சாகமாகி, நிகழ்ச்சி நடத்த ஒப்புக் கொண்டார்.

சிவாஜி கணேசன் சிறந்த நடிகர், மனிதாபிமானி, தேசத்தின் மீது அளவில்லாத அன்பும், பெருமையும் கொண்டவர். இந்தியா போரில் ஈடுபட்ட போதெல்லாம் அள்ளி அள்ளி வழங்கியவர். அவரளவுக்கு பணமும், பொன்னும் தேசத்திற்காக கொடுத்தவர்கள் குறைவு.

1966 இல், அன்றைய சோவித் யூனியனின் தலையீட்டால் இந்தியா - பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டுவர தாஷ்கண்ட் ஒப்பந்தம் போடப்பட்டது. அதற்கு முன், போருக்காக அன்றைய இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நிதி திரட்டினார். சமூக சேவகி ராஜி ரங்கராச்சாரி இயக்குனர் சி.வி.ஸ்ரீதரை அணுகி, திரையுலகினரை ஒன்றிணைத்து நிதி திரட்டலாம் என்று கூற, அந்த விஷயத்தை சிவாஜியின் காதுகளுக்கு எடுத்துச் சென்றார் ஸ்ரீதர். தேசம் என்றால் துள்ளி எழும் சிவாஜி, எதிர்பார்த்தது போல் படுஉற்சாகமாகி, நிகழ்ச்சி நடத்த ஒப்புக் கொண்டார். அவருக்காக புதிய நாடகத்தை ஸ்ரீதர் தனது நண்பர் சித்ராலயா கோபுவுடன் இணைந்து எழுதினார். திரைநட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொள்வது போல் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு ஊரிலும் இரண்டு லட்சத்திற்கு குறையாமல் வசூலானது. அதற்கு காரணமாக இருந்தவர் சிவாஜி.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீதரின் மனதில் ஓர் எண்ணம். தேசத்தை மையப்படுத்தி ஒரு திரைப்படம் எடுத்தால் என்ன? நண்பர் கோபுவுடன் விவாதித்து ஒரு கதையை தயார் செய்தார். சிவாஜி ரிட்டையர்ட் கர்னல். போரில் ஒரு காலை இழந்தவர். அவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் ராணுவ அதிகாரி. இளையவனுக்கு வேலையில்லை. அவன் ஒரு பெண்ணை காதலிக்க, வேலையில்லாத வெட்டிப் பயலுக்கு எதுக்குடா காதல் என கடிந்து கொள்கிறார். வீட்டைவிட்டுச் செல்லும் இளைய மகன் திரும்பி வருகையில் சிவாஜி அன்போடு அவனை வரவேற்கிறார். காரணம் அவன் இப்போது விமானப் படையில் பைலட். இறுதிக் காட்சியில் இரண்டு மகன்களும் போரில் மாண்டு போவதாக கதை.

சிவாஜிக்கு அல்வா சாப்பிடுவது போன்ற கதாபாத்திரம். பிரமாதப்படுத்திடுவோம் ஸ்ரீதர் என்று உற்சாகமாக பச்சைக்கொடி காட்டுகிறார். அவருடன் முத்துராமன் உள்பட சிலரை ஒப்பந்தம் செய்து மேக்கப் டெஸ்டும் எடுக்கிறார்கள். சிவாஜிக்கும் மில்லிட்டரி உடை தந்து மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. படத்துக்கு நெஞ்சிருக்கும் வரை என்று பெயரும் வைத்துவிட்டார்கள். சீரியசான கதை என்பதால் கருப்பு வெள்ளையில் படத்தை எடுப்பது எனவும் முடிவாகிறது.

இந்த நேரத்தில் தாஷ்கண்ட் ஒப்பந்தம் இந்தியா - பாகிஸ்தான் இடையே கையெழுத்தாகி அமைதி திரும்புகிறது. இரண்டு நாடும் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும் நிலையில்  நெஞ்சிருக்கும் வரை கதையை எடுக்கலாமா என்ற கேள்வி எழுகிறது. தேச நலனுக்காக எழுதிய கதை, ஒருவேளை தேச நலனுக்கே எதிராக அமைந்தால்…? சென்சார் அனுமதி மறுத்தால்…? ஸ்ரீதரின் சந்தேகத்தை ஒத்துக்கொண்ட சிவாஜியும், தேசத்திற்காக யார் யாரோ எதையெதையோ தியாகம் செய்யும் போது நீ ஒரு கதையும், நான் ஒரு கதாபாத்திரத்தையும் தியாகம் செய்யக் கூடாதா என்று அந்தக் கதையை படமாக்கும் முடிவை கைவிட்டனர்.  இந்த சம்பவம் சினிமாத்துறையையே ஷாக்கில் ஆழ்த்தியது. அதன் பிறகு அதே சிவாஜி, முத்துராமனை வைத்து ஸ்ரீதரும், கோபுவும் உருவாக்கியதுதான் இன்று நாம் பார்க்கிற நெஞ்சிருக்கும் வரை படம்.

இதில் வறுமையில் வாடும் சிவாஜி தனது ஹவுஸ் ஓனரின் மகள் கே.ஆர்.விஜயாவை காதலிப்பார். ஆனால், கே.ஆர்விஜயா சிவாஜியின் நண்பர் முத்துராமனை காதலிப்பார். இதனை அறிந்ததும் சிவாஜி ஏமாற்றத்தை மனதில் புதைத்து நண்பனின் காதலுக்கு உதவுவார். கே.ஆர்.விஜயாவின் தந்தை இறந்த நிலையில், முத்துராமனின் வாழ்க்கை உயர, அவரது குணம் மாறும். சிவாஜி கே.ஆர்.விஜயாவை பார்த்துக் கொள்ளும் சூழல் உருவாகும். இதனை தவறாக புரிந்து கொண்டு முத்துராமன் கே.ஆர்.விஜயாவை ஒதுக்க, தன்னுயிரை கொடுத்து இருவரையும் சிவாஜி ஒன்றிணைப்பார்.

இந்தப் படத்தில் நடித்த யாருக்கும் மேக்கப் இல்லை. முத்துக்களோ கண்கள்.., பூ முடிப்பாள்… போன்ற பாடல்கள் ஹிட்டாயின. எனினும், நாயகன் நாயகியுடன் சேராமல் ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது. நல்ல படம் . ஒருவேளை ஸ்ரீதர் அந்த கர்னல் கதையை எடுத்திருந்தால் அது ஸ்ரீதர், சிவாஜி இருவரது வாழ்விலும் ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கும்.

1967 மார்ச் 2 ஆம் தேதி   வெளியான நெஞ்சிருக்கும் வரை   57 வது வருடத்தை நிறைவு செய்கிறது.

Devakottai Dolphin AR Ramanathan

Leave a Reply