• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவாஜியை அசிங்கப்படுத்திய எம்.ஜி.ஆர் பட இயக்குனர்…

சினிமா

இவனையெல்லாம் ஏன் உள்ள விட்டீங்க!. சிவாஜியை அசிங்கப்படுத்திய எம்.ஜி.ஆர் பட இயக்குனர்…

சினிமாவில் எந்த நடிகராக இருந்தாலும் சரி தனக்கென ஒரு இடத்தை பிடிக்கும் வரை போராட்டங்கள் இருக்கும். பல அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்கும். முகத்துக்கு நேராகவும், முதுகுக்கு பின்னாலேயேயும் பலரும் அசிங்கப்படுத்துவார்கள். அதையெல்லாம் மீறி நின்றால்தான் சினிமாவில் வெற்றிபெற முடியும்.

சிறு வயது முதலே நாடகங்களில் நடித்தவர்தான் சிவாஜி. நாடகங்களில் பல வேஷங்களை போட்டிருக்கிறார். பல நாடகங்களில் பெண் கதாபாத்திரங்களில் நடித்தவர்தான் சிவாஜி என்பது பலருக்கும் தெரியாது. இதை ஒரு பேட்டியில் அவரே சொல்லியிருக்கிறார். முதல் படமே ஏவிஎம் தயாரிப்பில் பராசக்தி எனும் படத்தில் நடித்தார்.

இந்த படம் நடிக்கும்போதும் பல அவமானங்களை அவர் சந்தித்திருக்கிறார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், சிவாஜி வேண்டாம் என சொல்லியிருக்கிறார் ஏவி மெய்யப்ப செட்டியார். ஆனால், அவர்களுடன் இணைந்து அப்படத்தை தயாரித்தவரும், சிவாஜியின் குருவுமான பெருமாள் முதலியார் அதற்கு சம்மதிக்கவில்லை.

சிவாஜிக்கு நல்ல சாப்பாடு கொடுத்து கொஞ்சம் வெயிட் போட வைத்து அதன்பின் அப்படத்தில் நடிக்க வைத்தார். அந்த படம் முடிந்து வெளியாகி ஹிட் அடித்தபின் சிவாஜிக்கு பல பட வாய்ப்புகள் வந்தது. அதில், நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார் சிவாஜி. சினிமாவில் அவர் போடாத வேஷங்களே இல்லை எனும் சொல்லுமளவுக்கு நடித்து ரசிகர்களின் மனதில் நடிகர் திலகமாகவும் மாறினார்.

பராசக்தி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக சிவாஜி ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு ஒருமுறை வந்த போது அவரை பார்த்த இயக்குனர் ஒருவர் ‘இவனையெல்லாம் ஏன் உள்ள விடுறீங்க?’ என சிவாஜிக்கு கேட்கும்படியே கேட்டிருக்கிறார். ஆனாலும், சிவாஜி துவண்டுபோகவில்லை. தனது நடிப்பையே அதற்கு பதிலாக கொடுத்தார்.

சிவாஜியை அப்படியே கேட்ட அந்த இயக்குனர் பா.நீலகண்டன். பின்னாளின் எம்.ஜி.ஆரை வைத்து பல திரைப்படங்களை அவர் இயக்கியிருக்கிறார். அவர் கதை எழுதிய சபாஷ் மீனா படத்திற்காக சிவாஜியிடம் சென்று ‘இந்த படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும்’ என கேட்டவரும் அவர்தான். இதை தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதியுள்ள சிவாஜி ‘என்னை பார்த்து அப்படி கேட்டவர் என்னை நடிக்க அழைத்தார் எனில் வெற்றி யாருக்கு?’ என குறிப்பிட்டிருக்கிறார்.
 

Leave a Reply