• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்த ஹிட் பாட்டுக்கு எஸ்.பி.பி சம்பளம் 500 ரூபாய்- நண்பருடன் குலோப் ஜாமுன் சாப்பிட்டு கொண்டாட்டம்

சினிமா

தமிழில், சாந்தி நிலையம் என்ற படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் இளையகன்னி என்ற பாடல் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார்.

ஒரு ஹிட் பாடலுக்கு ரூ500 சம்பளமாக கொடுத்தார்கள். அதற்கான செக் வாங்கும்போது எனக்கு தலை சுத்திடுச்சி. நானும் எனது நண்பனும் அந்த பணத்தை வைத்து ஜாலியாக செலவு செய்தோம் என எஸ்.பி.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனது இனிமையான குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியன். 1966-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான எஸ்.பி.பி 1969-ம் ஆண்டு தமிழில் ஹோட்டல் ரம்பா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இந்த படம் கைவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழில், சாந்தி நிலையம் என்ற படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் இளையகன்னி என்ற பாடல் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார். இந்த பாடல் எஸ்.பி.பி.க்கு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்தடுத்து படங்களில் ஹிட் பாடல்களை பாடியிருந்தார். இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை கொடுத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் எஸ்.பி.பி தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி என ஓய்வில்லாமல் அனைத்து மொழிகளிலும் பாடல்கள் பாடிக்கொண்டிருந்துள்ளார். அதே சமயம் சாந்தி நிலையம் படத்தில் பாடிய பிறகு, எஸ்.பி.பிக்கு சரியான வாய்ப்புகள் இல்லாததால் அவர் தெலுங்கில் பாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சம்பளம் ரூ150-250 வரை தான். அதன்பிறகு தமிழில் எம்.ஜி.ஆர் நடிப்பில் 1969-ம் ஆண்டு வெளியான வெளியான அடிமைப்பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா பாடல் மூலம் தமிழில் என்டரி ஆனார்.

தெலுங்கில் ரூ150-250 வரை சம்பளம் பெற்றிருந்த எஸ்.பி.பிக்கு இந்த பாடல் மூலம் சம்பளமாக ரூ500 கிடைத்துள்ளது. இதற்கான செக்கை பார்த்தவுடன் எனக்கு தலை சுத்திடுச்சி. உடனடியாக நானும் என் நண்பன் முரளியும் சேர்ந்து ரயில்வே ஸ்டேஷன் போய்ட்டு குலாப்ஜாமுன், மசால்தோசை, டபுல் ஸ்ராங் காபி சாப்பிட்டு செலிபிரேட் செய்தோம். இந்த பணத்தின் மூலம் நான் இன்ஜினியரிங் படிக்கும்போது எங்க அப்படி மாதாமாதம் எனக்கு அனுப்பும் பணத்தை 7-8 மாதங்களுக்கு நிறுத்தி அவரின் செலவை மிச்சப்படுத்த முடிந்தது என்று எஸ்.பி.பி.ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

தேன்மொழி

Leave a Reply