• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லுப்தான்சா ஊழியர்கள் வேலைநிறுத்தம் - 1000 விமான சேவை பாதிப்பு

ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனமான லுப்தான்சா ஐரோப்பாவில் 2-வது பெரிய விமான நிறுவனமாக திகழ்கிறது.

லுப்தான்சா விமான நிறுவன கிளைகளில் சுமார் 25 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். ஜெர்மனி நாட்டில் பிராங்க்பர்ட், முனிச் பகுதிகளில் லுப்தான்சா விமான நிறுவனங்களின் முக்கிய அலுவலகங்கள் உள்ளன.

அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் லுப்தான்சா கிளைகள் செயல்பட்டு வருகின்றன. பல நாடுகளுக்கும் விமான சேவைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஜெர்மனியில் உள்ள லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி இன்று திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் 1000 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்த வேலை நிறுத்தத்தால் ஜெர்மனியில் இருந்து சென்னை வரும் விமானங்களும், சென்னையில் இருந்து ஜெர்மனி செல்லும் விமானங்களும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து அமெரிக்கா, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய லுப்தாப்சா விமான பயணிகளும் தவிப்புக்கு உள்ளாகினர். ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் 1 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த போராட்டம் இன்று காலை 7 மணிக்கு ஜெர்மனியில் தொடங்கியது. 27 மணி நேரம் இந்த போராட்டம் நீடிக்கும். நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7:10 மணிக்கு போராட்டம் முடிவடையும் என விமான தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
 

Leave a Reply