• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளாமர் புகைப்படங்களை பதிவிட இதுதான் காரணம்.. VJ மகேஸ்வரி ஓபன் டாக் 

சினிமா

சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தான் விஜே மகேஸ்வரி. ஒரு சில சீரியல்களில் நடித்துள்ள இவர் தற்போது சினிமாவில் சில படங்களில் நடித்து வருகிறார்.

VJ மகேஸ்வரி நடிப்பதை தாண்டி அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட VJ மகேஸ்வரியிடம், சோசியல் மீடியாவில் கிளாமர் புகைப்படங்களை பதிவிடுவதற்கு காரணம் எதுவும் இருக்கிறதா? என்று கேள்வி கேட்டகப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அவர், "எனக்கு சிறுவயதில் இருந்து அழகான ஆடை அணிவதில் மிகவும் விருப்பம் இருக்கிறது. எனக்கு நயன்தாராவை ரொம்ப பிடிக்கும். அவர்களை மாதிரி நானும் அழகாக இருக்கவேண்டும் என்று எண்ணம் இருக்கிறது".

"என்னுடைய மகனை நன்றாக வளர்க்கிறேன். அவனை சரியாக பார்த்துக்கொள்கிறேன். இனி நான் வாழபோகும் கால கட்டத்தில் எனக்கு பிடித்ததை செய்யவே விரும்புகிறேன்" என்று VJ மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.  
 

Leave a Reply