• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நிலா அது வானத்து மேலே பாடலுக்கு ஆடி, நிலா அது பூமியின் மேலே என்று உணர்த்திய நடிகை குயிலி

சினிமா

அந்க காலத்து நட்சத்திர நடிகையான குயிலி பிறந்த தினம் இன்று. ‘நிலா அது வானத்து மேலே’ என்ற நாயகன் பட பாடலை நாம் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அந்த காலத்தில் நல்ல ஐட்டம் பாடலாக இருந்தது. அந்தப்பாடலில் நடித்த குயிலியையும் நிச்சயம் நாம் மறக்கவே முடியாது. அந்த காலத்து கவர்ச்சிக்கன்னியாக விளங்கியவர்.

குயிலி பூவிலங்கு என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் நிறைய திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். வெள்ளித்திரைக்குப் பின் சின்னத்திரையில் நடிக்க துவங்கினார். விஜய் தொலைக்காட்சி தொடரான சரவணன், மீனாட்சியில் அம்மாவாக நடித்தார். அந்தத்தொடர் சின்னத்திரையில் மிக பிரபலமான தொடராகும். இவர் 1961ம் ஆண்டு ஜீன் 14ம் தேதி சென்னையில் பிறந்தார். 

இவரது பெற்றோர் இந்திய சுதந்திரத்தின் மீது வைத்த மதிப்பின் காரணமாக இவருக்கு குயிலி என்று பெயர் வைத்தனர். 1780ம் ஆண்டு சுதந்திர போராட்டத்தின்போது, தென்னாட்டை ஆண்டு வந்த வேலுநாச்சியாரின் பெண்கள் படைக்கு தலைமை ஏற்றவர் குயிலி. ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய வீர வேலுநாச்சியாருக்கு துணையாக ஆங்கிலேயரை எதிர்த்து போராடியவர் குயிலி. சிவகங்கை பகுதியில் ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கு இருந்தது. 

அப்பகுதியில் இருந்த கோயிலுக்கு நவராத்திரி விழாவுக்கு பெண்கள் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. யாரும் செல்ல அனுமதியில்லாத பகுதியில் பூஜைக்கு செல்லும் வாய்ப்பை பயன்படுத்தி குயிலி தற்கொலை படையாக மாறி தனக்குத்தானே தீவைத்துக்கொண்டு ஆயுதக்கிடங்கில் குதித்து ஆங்கிலேயரின் ஆயுதங்களை அழித்தார். இவரது தியாகத்தின் நினைவாகத்தான் இவருக்கு குயிலி என்று பெயர் வைத்தனர்.

குயிலி சிறு வயதில் துறுதுறு குழந்தை. அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது, பின்னர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார். தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் ஒரு படத்தில் பாடலுக்கு நடனமாடினார். பின்னர் பொய்க்கால் குதிரை படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். 1984ம் ஆண்டு குயிலி அறிமுகமானார். 

இதே படத்தில் தான் நடிகர் முரளியும் அறிமுகமானார். இந்த படம் இளையாராஜாவின் இசையால் ஹிட்டானது. இந்தப்படத்தில் வரும் ‘ஆத்தாடி பாவாட காத்தா’ என்ற பாடல் நல்ல ஹிட்டானாதல், இந்தப்படம் முரளி, குயிலி இருவருக்குமே ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து பாலச்சந்தரின் கல்யாண அகதிகள் என்ற படத்தில் நடித்தார். துணை நடிகையாக நடித்திருந்தார். முன்னணி நடிகையாகவில்லை. 

ஆனாலும் குறிப்பிடப்படும் ஒரு நாயகியாக இருந்தார். பாலச்சந்திரடம் அதிக அடி வாங்கிய நடிகை என்ற பெயர் பெருமளவு அவரிடம் நன்றாக நடிக்க நிறைய அடி வாங்கியிருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்தார். முதலில் அவரிடம் அடி வாங்கிய குயிலி பின்னர் நனறாக நடித்ததற்காக அவரிடம் பாராட்டும் வாங்கியுள்ளார். அதை தனது வாழ்நாளில் மறக்க முடியாது என்று குயில் ஒருமுறை தனது பேட்டியில் தெரிவித்திருந்தார். 

கவர்ச்சிக்கு மாறியும் அது பெரிதாக அவருக்கு கை கொடுக்கவில்லை என்பதால், குயிலி சிறுசிறு குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார். பின்னர் தவசி படத்தில் சிறப்பாக நடித்ததை அடுத்து, அவருக்கு அதன் பின்னர் நல்ல வேடங்கள் கிடைத்தது. பின்னர் சின்னத்திரை வெற்றி தொடர்களில் நடிக்க துவங்கினார். வெள்ளித்திரையைவிட சின்னத்திரையில் அவர் கலக்கினார்.

குயிலியின் பிறந்த நாளில் அவருக்கு பிடித்த சில விஷயங்கள் பற்றி தெரிந்துகொள்வோம். குயிலிக்கு பிடித்த நடிகர் சிவாஜி கணேசன், பிடித்த நடிகை பத்மினி, பிடித்த உணவு காய்கறி கிரேவி, பிடித்த படங்கள் தளபதி மற்றும் நாயகன், பிடித்த இடம் பெங்களூர். குயிலுக்கு நடிக்கத்துவங்கி 35 ஆண்டுகளுக்கு பின்னர்தான் விருது கிடைத்தது. காவியத்தலைவன் படத்தில் அவருக்கு விருது கிடைத்தது.

பின்னர் அரசியலில் ஈடுபட்டார். அதிமுகவுக்கு ஆதரவாக இருந்தார். திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராகவும் இருந்தார். சர்வதேச திரைப்பட விழாக்களில் ஆர்வம் காட்டி வந்தார்.

Live Tamil News - தமிழ் செய்திகள் 

Leave a Reply