• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாணி ஜெயராமுக்கு எமது காணிக்கை 

சினிமா

தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக 1974ஆம் ஆண்டு தீர்க்கசுமங்கலி ௭ன்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி இயற்றிய மல்லிகை ௭ன் மன்னன் மயங்கும் பாடலை
 MS விசுவநாதன் இசையில் பாடினார். அதன் பின்னர் ஏழு சுவரங்களுக்குள், கேள்வியின் நாயகனே, ௭ன்னுள்ளே ௭ங்கும் ஏங்கும் கீதம், யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது, கவிதை கேளுங்கள் கருவில் போன்ற பாடல்களை தமிழ்த் திரையுலகில் பாடினார். இவர் திரையிசை, பாப், கஜல், பஜனை, நாட்டுப்புறப் பாடல்களும் பாடியுள்ளார். இவர் தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி ௭ன்றாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஒடியா, குஜராத்தி மற்றும் பெங்காளி ௭ன பல இந்திய மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். வாணி ஜெயராம் மூன்று முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான இந்திய தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.
நித்தம் நித்தம் நெல்லு சோறு
நெய் மணக்கும் கத்திரிக்கா
நித்தம் நித்தம் நெல்லு சோறு
நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு
என்ன இழுக்குதைய்யா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு
வந்து மயக்குதைய்யா
பச்சரிசி சோறு..ம்ம் ..
உப்பு கருவாடு
சின்னமனூரு வாய்க்கா
சேலு கெண்ட மீனு
குருத்தான மொளை கீரை
வாடாத சிறு கீரை
நெனைக்கையிலே எனக்கு இப்போ
எச்சி ஊறுது
அள்ளி தின்ன ஆசை வந்து
என்னை மீறுது
நித்தம் நித்தம் நெல்லு சோறு
நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு
என்ன இழுக்குதைய்யா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு
வந்து மயக்குதைய்யா
பாவக்கா கூட்டு
பருப்போட சேத்து
பக்குவத்த பாத்து
ஆக்கி முடிச்சாச்சு சிறுகாலான் வருத்தாச்சு
பதம் பாத்து எடுத்தாச்சு
கேழ்வெரகு கூழுக்கது
ரொம்ப பொருத்தமைய்யா
தெனங்குடிச்சா ஒடம்பு இது
ரொம்ப பெறுக்குமைய்யா
நித்தம் நித்தம் நெல்லு சோறு
நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு
என்ன இழுக்குதைய்யா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு
வந்து மயக்குதைய்யா
பழையதுக்கு தோதா
புளிச்சி இருக்கும் மோறு
பொட்டுகள்ள தேங்கா
போட்டறச்ச தொவயலு
சாம்பாரு வெங்காயம்
சலிக்காது தின்னாலும்
அதுக்கு இணை ஒலகத்துல
இல்லவே இல்ல
அள்ளி தின்னேன் எனக்கு இன்னும்
அலுக்கவே இல்ல
இத்தனைக்கும் மேலிருக்கு
நெஞ்சுக்குள்ளே ஆச ஒன்னு
சூசகமா சொல்ல போறேன்
பொம்பள தாங்க
சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க  என்றார் 
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
என் நேரமும் உன் ஆசை போல்
பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள் மேனியை தொட்டு தாலாட்டுது
குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி
கொஞ்சி பேசியே அன்பை பாராட்டுது
என் கண்ணன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம்தான்
கையோடு நான் அல்லவோ
என் தேவனே உன் தேவி நான்
இவ்வேளையில் உன் தேவை என்னவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
பொன் மாங்கல்யம் வண்ண பூ சரம்
பொன் மாங்கல்யம் வண்ண பூ சரம்
மஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது
ஓராயிரம் இன்ப காவியம்
உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது
நம் இல்லம் சொர்க்கம்தான்
நம் உள்ளம் வெல்லம்தான்
ஒன்றோடு ஒன்றானது
என் சொந்தமும் இந்த பந்தமும்
உன்னோடுதான் நான் தேடிக் கொண்டது
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
என் நேரமும் உன் ஆசை போல்
பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
என்று இதம் தந்தார் 
இந்திய திரைத்துறையில் 10 ஆயிரத்துக்கும் மேல் பாடல்கள் பாடிய மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம்
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தனது இனிமையான குரலால் திரையுலகில் வானுயர வளர்ந்து நிற்பவர். இவர், டி.ஆர்.பாலசுப்ரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்நாடகாவில் இசையைப் பயின்றவர் ஆவார். வானொலியில், போடப்படும் பாடல்களைக் கேட்டுக் கேட்டு தானும் ஒரு பாடகியாக வேண்டும் என்கிற ஆசையை மனதில் வைத்து அதன்படி சாதித்தும் காட்டியவர்.இசை மீது வாணி ஜெயராமுக்கு இருந்த தீரா காதல் இவரை இந்திய அளவில் புகழ்மிக்க பாடகியாக மாற்றியது. ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னர், ஒரு ஆண் இருப்பர் என்பது வாணி ஜெயராம் (Vani Jayaram) விஷயத்தில் 100 சதவீதம் உண்மை. மனைவியின் பாடகி ஆசையை நிறைவேற்றப் பக்க பலமாய் நின்றார் அவரின் கணவர் ஜெயராம்.
இவர் திரைத்துறையில் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியவர்.

1972 – சிறந்த பின்னணிப் பாடகிக்கான குசராத்து மாநில திரைப்பட விருது – கூங்காட்
1979 – சிறந்த பின்னணிக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது–அழகே உன்னை ஆராதிக்கிறேன்
1979 – சிறந்த பின்னணிப் பாடகிக்கான நந்தி விருது – சங்கராபரணம்
1982 – சிறந்த பாடகருக்கான ஒடிசா மாநில திரைப்பட விருது – தேப்ஜானி
1975–தேசிய விருது – சில பாடல்கள் (அபூர்வ ராகங்கள்)
1980–சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது – சில பாடல்கள் (சங்கராபரணம்)
1991–சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது – "அனத்திநீயர ஹர" (சுவாதி கிரணம்)
2023-பத்ம பூசண் விருது, இந்திய அரசு
1972 – மும்பையின் சுர் சிங்கர் சம்சாத் வழங்கிய "போல் ரே பாபி ஹரா" திரைப்படத்தில் 'பழமையான பாடலின்' சிறந்த திரைப்படப் பின்னணிப் பாடகர் மியான் தான்சென் விருது.
1979 - பண்டிட் ரவிசங்கர் இசையமைத்த மீரா திரைப்படத்தில் இவரது பாடல்கள் "மேரே டூ கிரிதர் கோபால்" ஃபிலிம் வேர்ல்ட் (1979) சினி ஹெரால்டு (1979) விருதுகளைப் பெற்றுத் தந்தது.
1991 – தமிழ்த் திரைப்பட இசைக்கான இவரது பங்களிப்பிற்காக தமிழ்நாடு மாநிலத்தின் கலைமாமணி விருது.
1992 - "சங்கீத் பீட் சம்மான்" விருது பெற்ற இளைய கலைஞர்
2004 – எம். கே. தியாகராஜர் பாகவதர் – தமிழ்நாடு அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது
2005 – நான்கு தென்னிந்திய மொழிகளிலும் திரைப்பட இசைக்கான இவரது சிறந்த பங்களிப்பிற்காக கமுகரா விருது.
2006 – முத்ரா அகாதமி, சென்னையின் முத்ரா விருது
2012 – இசைக்கான இவரது பங்களிப்பிற்காக சுப்ரமணிய பாரதி விருது
2014 - ரேடியோ மிர்ச்சியின் வாழ்நாள் சாதனையாளர் விருது 16 ஆகஸ்ட் 2014 அன்று ஹைதராபாத்தில் வழங்கப்பட்டது
2014 - ஏசியாவிசன் விருது - "1983' திரைப்படத்தின் 'ஓலஞ்சலி குருவி' பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகர் விருது
2014 - கண்ணதாசன் விருது, கண்ணதாசன் கழகம், கோவை
2015 - வாழ்நாள் சாதனையாளர் விருது ரெயின்ட்ராப்ஸ் ஆன் மகளிர் சாதனையாளர் விருது வழங்கும் விழா சென்னை.
2016 - யேசுதாசுடன் சிறந்த இணைப் பாடலுக்கான ரெட் எஃப்எம் மியூசிக் விருதுகள் 2016
2017 - வனிதா திரைப்பட விருதுகள் - சிறந்த பாடகி
2017 - கண்டசாலா தேசிய விருது
2017 - வட அமெரிக்க திரைப்பட விருதுகள் - நியூயார்க்- 22 சூலை 2017 - சிறந்த பெண் பின்னணிப் பாடகி - மலையாளம்
2018 - எம். எஸ். சங்கர நேத்ராலியா வழங்கிய சுப்புலட்சுமி விருது - சென்னை - 27 சனவரி 2018
2018 - பிரவாசி எக்ஸ்பிரஸ் விருதுகள் சிங்கப்பூர், வாழ்நாள் சாதனையாளர் விருது - 14 சூலை 2018.
போன்ற விருதுக்களைப் பெற்று விருதுகளுக்கே பெருமை சேர்த்தார் 
1974 ஆம் ஆண்டு தமிழில் "தீர்க்கசுமங்கலி" படத்தில் "மல்லிகை என் மன்னன் மயங்கும்" என்ற,முத்தான பாடலாக அமைந்தது.
தீர்க்கசுமங்கலி படத்திற்கு முன்பே, இவர், "வீட்டுக்குவந்த மருமகள்", "சொல்லத்தான் நினைக்கிறேன்" முதலான படங்களில் பாடியிருந்தாலும், தீர்க்கசுமங்கலி படமே முதலில் வந்ததால், அதில் இடம்பெற்ற இவர் பாடிய பாடலே, முதல்பாடலானது.
மாடர்ன், கர்நாடக இசை, கஜல், பாப்நாட்டுப்புறஇசை, உள்ளிட்ட பலவிதமான இசைப்பாடல்களையும் நன்றாகப் பாடக்கூடியவர் பாடகி வாணிஜெயராம்.
இந்தியாவின் முதல் 3டி படமான "மைடியர் குட்டிச்சாத்தான்" படத்தில், இவர் பாடிய "செல்லக்குழந்தைகளே!" பாடலில், இசையிலும்சரி, குரலிலும் சரி, குழந்தைகளின் குதூகலஉணர்வு வழிந்தோடுவதை உணரமுடியும். பழைய "பாலைவனச்சோலை" படத்தில் இவர் பாடிய "மேகமே! மேகமே!" பாடல், இன்றளவும் கேட்பவர்கள் மனதை, நெகிழவைக்கக் கூடியது.
'புனித அந்தோனியார்' படத்தில் 'மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்', பி. சுசீலாவுடன் இணைந்து 'பாத பூஜை' படத்தில் 'கண்ணாடி அம்மா உன் இதயம்', 'அந்தமான் காதலி'யில் 'நினைவாலே சிலை செய்து', 'சினிமாப் பைத்தியம்' படத்தில் 'என் உள்ளம் அழகான வெள்ளித்திரை', 'தங்கப்பதக்க'த்தில் 'தத்திச் செல்லும் முத்துக் கண்ணன்சிரிப்பு, 'பாலாபிஷேக'த்தில் 'ஆலமரத்துக் கிளி' எனக் கேட்டதுமே இதயத்துள் ஈரம் படச் செய்யும் குரலினிமையுடன் அவர் பாடிய பாடல்களின் பட்டியல் மிகப் பெரிது.
'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' படத்தில் 'என்னுள்ளே ஏதோ', 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' படத்தில் இடம்பெற்ற 'நானே நானா', 'சிறை' படத்தில் 'நான் பாடிக்கொண்டே இருப்பேன்' , 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தின் 'கட்டிக் கரும்பே கண்ணா', 'மயங்குகிறாள் ஒரு மாது' படத்தில் 'ஒருபுறம் வேடன். மறுபுறம் நாகம்', 'காலங்களில் அவள் வசந்தம்' படத்தில் 'மணமகளே உன் மணவறைக் கோலம்' ஆகிய பாடல்களை எடுத்துக்காட்டலாம்.
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது", "என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்", "கேள்வியின் நாயகனே", என்று வாணி ஜெயராம் அவர்களின் குரல் இனிமைக்கு, சாட்சிகளாக எத்தனையோ பாடல்களை உதாரணமாகக் கூறலாம்.
கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட வாணி ஜெயராம் தமிழ் நாடு வேலூரில் 1945 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி பிறந்தவர்.
வாணிஜெயராம் ராணிமேரி கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த கையோடு, பாரத ஸ்டேட்வங்கியில் அதிகாரியாக பணியாற்றினார். அவருடைய இசைத்திறமையை அறிந்த கணவர் ஜெயராம்தான், இவரை, முழுநேர பாடகியாக்க முயற்சிமேற்கொண்டார்.
கடந்த சில நாட்களாக அவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். கடந்த வாரம் அவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டபோது, பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க பேசினார்கள். மகிழ்ச்சியாக இருந்தார். அவரின் திறமைக்குக் கிடைக்கவேண்டிய அங்கீகாரம் கிடைத்தபின்னர் அவர் நம்மைவிட்டு மறைந்துவிட்டார் என்பதை ஏற்கமுடியவில்லை.
 தனது இறுதி நாட்களை தனிமையில் கழித்திருக்கிறார். அவர் வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பணியாட்கள் பலரும் அவரை பார்த்துப் பல நாட்கள் ஆனதாக கூறுகிறார்கள்.
வாணிஜெயராம், தன்பெற்றோருக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். எட்டாவது பெண்குழந்தையான வருத்தத்தில், தந்தை, பதினைந்து நாட்களாகியும் பெயரிடுவதில் கவனம் செலுத்தாதிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த ஜோதிடர், இவருடைய ஜாதகத்தை ஆராய்ந்து, இவர் சரஸ்வதியின் அம்சமென்றும், பெற்றோரின் பூர்வஜென்ம பலனாகப் பிறந்த இவருடைய அருமைபெருமை பிற்காலத்தில்தான் விளங்குமென்றும் கூறி, அதை ஜாதகநோட்டிலும் குறித்தார். கலைவாணி என்றுபெயரிடுமாறு அவர் கூறியதை அடுத்தே, அப்பெயர் இடப்பெற்றது. கலைவாணியின் சுருக்கமே வாணி.
வாணிஜெயராமும், எழுத்தாளர் சிவசங்கரியும் நெருங்கிய தோழிகளாவர். இருவரையும் ஒருசேரப் பார்த்தால், சகோதரிகள் என்று கூறுமளவிற்கு உருவமைப்பு ஒத்திருக்கும்.
கலைவாணி என்றிருந்த பெயர், திருமணத்திற்கு பின், வாணி ஜெயராம் என்று மாறியது. என்று குறிப்பிட்டேன் அல்லவா 
மும்பையில், வீட்டிலிருந்து நடந்து போகும் துாரத்தில் தான், அவர் வேலை செய்த வங்கியின் கிளை இருந்தது. அதனால், குடும்பத்தையும் கவனித்து, வேலைக்கு செல்வது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை.
அதிகாலை எழுந்து, சமையல் வேலைகளை முடித்து, கணவரை ஆபீசுக்கு அனுப்பி, தானும் கிளம்பி வங்கிக்கு போவார். திரும்ப மதியம், உணவு வேளையில் வீட்டுக்கு வந்து, அம்மா - அப்பாவுக்கும் (மாமியார் - மாமனாரை அப்படித்தான் அழைப்பார்) அவரது கணவருக்கும் (கணவர் அலுவலகமும் வீட்டிலிருந்து நடந்து போகும் துாரம் என்பதால், அவரும் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துவிடுவார்) சாப்பாடு பரிமாறி, தானும் சாப்பிட்டு, மறுபடி வேலைக்கு கிளம்பி விடுவார்.
மாலை வீட்டுக்கு வந்து, இரவு சமையலை செய்வார். இவ்வாறு, தினசரி வாழ்க்கை போய் கொண்டிருந்தது.
ஒருநாள், அவரது கணவர், 'எனக்காகவும், அப்பா - அம்மாவுக்காகவும் நீ இவ்வளவு துாரம் எல்லாமே செய்யிறே. எவ்வளவு அழகா பாடக் கூடியவ நீ. அத, 'வேஸ்ட்' பண்ணக் கூடாது. நீ ஏன் ஹிந்துஸ்தானி இசை கத்துக்கக் கூடாது...' எனக் கேட்டார்.
அதுமட்டுமின்றி, அவரும், அவருடைய சித்தார் மாஸ்டரும், ஹிந்துஸ்தானி லைட் கிளாசிகல் கற்றுக் கொள்ள, உஸ்தாத் அப்துல் ரஹ்மான் சாஹேப்பிடம் வாணி ஜெயராமை அழைத்து போயினர். அடுத்த நாளிலிருந்து வாணிக்கு, ஹிந்துஸ்தானி பயிற்சி ஆரம்பமானது.
வாணி, வேலைக்கு சென்றதால், விடுமுறை நாட்களான சனி, ஞாயிறில் மட்டுமே ஹிந்துஸ்தானி சங்கீத பயிற்சி நடந்தது. ஆனால், வாணியின் சங்கீத ஈடுபாடும், சொல்லிக் கொடுக்கும்போதே சட்டென்று கற்றுக்கொள்ளும் வேகமும், அவருக்கு பெரிய எதிர்காலம் இருப்பதை உணர்ந்தார், குரு.
'வாரத்துக்கு இரண்டு நாள் பயிற்சி போதவே போதாது. நீ ஒழுங்கா முழுமூச்சா ஹிந்துஸ்தானி கத்துக்கிட்டாதான் நல்லது. அதனால, நீ வேலையை விட்டுட்டு மியூசிக்கில் முழுசா இறங்கணும்...' என்று, சொல்லி விட்டார்.
குரு சொல்வது போல், சங்கீதத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம், வாணியில் உள்ளம் முழுவதிலும் நிறைந்திருந்தது.
வங்கி வேலையை விட்டுவிட்டு, சங்கீதத்தில் முழுமூச்சாக இறங்கட்டுமா என, கணவரிடம் கேட்டார்.
'கலைன்றது எல்லாருக்குமே வராது... அது, இறைவன் கொடுத்த வரம். உனக்கு என்ன தோணுதோ அதையே செய்...' என்று, அவரின் எண்ணத்துக்கு பக்கபலமாக இருந்து, பச்சைக்கொடி காட்டி விட்டார், ஜெயராம்.
அதன் பின், வாணியின், ஹிந்துஸ்தானி இசை பயிற்சி, தினமும் காலை, 10:00 மணியிலிருந்து மாலை, 6:00 மணி வரை நடந்தது.
ஆறு மாத தீவிர பயிற்சிக்குப் பின், 'உனக்கு நான் கொடுத்த பயிற்சி போதுமானது. நீ, சினிமாவில் பின்னணி பாட போனா பிரமாதமா வருவே'ன்னு சொல்லி, ஆசிர்வாதம் செய்தார், குரு.
பின் அவரே, புகழ்பெற்ற மியூசிக் டைரக்டர், வசந்த் தேசாயிடம் வாணியை பற்றி கூறினார். உடனே, வாணியின் பாட்டை கேட்க, அவரை அழைத்தார், வசந்த் தேசாய்.
1971-ம் வருடப் புத்தாண்டு தினத்தில் வெளிவந்த ‘குட்டி’ (GUDDI) என்ற இந்திப் படத்தில், வசந்த் தேசாயின் இசை அமைப்பில் ‘போலே ரே பப்பி ஹரா’ என்ற ‘மியான் மல்ஹார்’ ராகப் பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். வாணி ஜெயராமின் குரல் அறிமுகமும் அந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமான ஜெயா பாதூரியின் (பின்னாளில் அமிதாப் பச்சனின் மனைவி ஆனார்) குடும்பப் பாங்கான தோற்றமும் இணைந்து பெரும் மாயத்தை செய்ய ரசிகர்கள் கிறங்கிப் போனார்கள்.
அறிமுகப் பாடலே அபார வரவேற்பைப் பெற்றது. அந்த ஒரு பாடலே வாணி ஜெயராமை முன்னணிப் பாடகியரின் வரிசையில் இடம்பெறச் செய்தது
அன்றில் இருந்து வாணியின் இசைப்பயணம் ஆரம்பமானது 
 அவரது திரையிசைப் பயணம் எழுதி முடிக்க முடியாத சாதனைகளை உள்ளடக்கியது. ஏனெனில் அவர் பாடாத இந்திய மொழியே இல்லை எனும் அளவுக்குச் சாதனைகள் படைத்திருக்கிறார். மதங்களைக் கடந்து பக்திப் பாடல்களையும் தனி ஆல்பங்களிலும் பாடியிருக்கிறார்.
குரலினிமைக்கு மட்டுமல்ல; கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளைத் தனது குரலை மாற்றாமலேயே கொண்டுவந்துவிடும் திறமை கைவரப் பெற்றிருந்தார். ஒரு பெண்ணின் விரக தாபத்தை வெளிப்படுத்தும் பாடல்களாக ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் ‘என்னுள்ளே ஏதோ’, ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படத்தில் இடம்பெற்ற ‘நானே நானா’, ‘சிறை’ படத்தில் ‘நான் பாடிக்கொண்டே இருப்பேன்’ ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அதேபோல் காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்ணின் ஆற்றாமையைக்
குரலில் சித்தரிக்கும் ‘சவால்’ படத்தின் ‘நாடினேன்.. நம்பினேன்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் ‘கட்டிக் கரும்பே கண்ணா’, ‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தில் ‘ஒருபுறம் வேடன். மறுபுறம் நாகம்’, ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தில் ‘மணமகளே உன் மணவறைக் கோலம்’ ஆகிய பாடல்களை எடுத்துக்காட்டலாம்.
தாய்மை அடைந்த பெண்ணின் பல்வேறு உணர்வு நிலைகளை வெளிப்படுத்தியதில் ‘திக்கற்ற பார்வதி’யின் ‘ஆகாயம் மழை பொழிஞ்சா’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தின் ‘மலர்போல் சிரிப்பது பதினாறு’ ‘சாவித்திரி’ படத்தில் ‘வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்’ ஆகிய பாடல்கள் சிறந்த உதாரணங்கள்.
கடலில் அசைந்தாடும் படகைப் போல உள்ளத்தை அசைக்கும் வாணி ஜெயராமின் பல பாடல்கள் ஒன்று ‘மீனவ நண்பன்’ படத்தில் இடம்பெற்ற ‘பொங்கும் கடலோசை’. ‘அவன்தான் மனிதன்’ படத்தில் இடம்பெற்ற ‘எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது’ சரணங்களில் ஏற்ற இறக்கங்களுடன் ஜாலம் புரியும் பாடல். காதலர்களின் தேசிய கீதமாக நீண்ட காலம் ஒலித்த ‘ஒரே நாள் உனை நான்’ என்ற ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படப் பாடலில் காதல் வழிந்தோடுவதைக் கேட்கமுடியும். இவருக்கு மாற்று யாருமில்லை என்று எண்ணத்தக்க வகையில் எல்லாப் பாடல்களிலும் அவர் வெளிப்படுத்தும் சஞ்சாரங்கள் பிரமிக்க வைப்பவை.
 சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். வாணி ஜெயராமின் கணவர் ஜெயராம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார்.
 அவரது தலையில் ரத்த காயங்கள் இருந்த நிலையில் அது சந்தேக மரணம் என முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது..பின்னர் போலீசார் வாணி ஜெயராம் தலையில் ஏற்பட்ட காயத்தால் தான் இறந்திருக்கிறார் என தெரியவந்திருப்பதாக கூறி இருக்கின்றனர். அவரது படுக்கை அறையில் இருக்கும் சின்ன மேஜையில் தலை இடித்து காயம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் தான் அவர் இறந்திருக்கிறார்.
மேலும் சிசிடிவியை ஆராய்ந்ததில் வேறு யாரும் அவரது வீட்டுக்கு வந்து செல்லவில்லை என்பதையும் உறுதி செய்திருக்கும் போலீசார் வாணி ஜெயராம் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என கூறி இருக்கின்றனர். 
வாணி ஜெயராம், நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலை முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தரைத்தள வீட்டில் வசித்தாா். கணவா் ஜெயராம் 2018-இல் இறந்த பின்னா், வாணி ஜெயராம் மட்டும் அங்கு தனியாக வசித்து வந்தாா். இவரது வீட்டில் நுங்கம்பாக்கம் புஷ்பாநகரைச் சோ்ந்த மலா்க்கொடி (45வயது ) பல ஆண்டுகளாக வேலை செய்து வருகிறாா். வாணி ஜெயராம் வீட்டுக்கு சனிக்கிழமை காலை 11 மணியளவில் மலா்க்கொடி வழக்கம்போல வேலைக்கு வந்தாா். 
வீடு உள்பக்கமாக பூட்டியிருந்ததால், மலா்க்கொடி அழைப்பு மணியை வெகுநேரம் அழுத்தியுள்ளாா். வீட்டின் கதவையும் தட்டியுள்ளாா். கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த மலா்க்கொடி, ஆழ்வாா்பேட்டையில் வசிக்கும் வாணி ஜெயராமின் சகோதரி உமாவுக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தாா். தகவலறிந்த உமா, அங்கு சென்று அந்தக் குடியிருப்புச் சங்கம் மூலம் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். 
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், உமா வைத்திருந்த மாற்றுச் சாவி மூலம் கதவை திறந்து, வீட்டினுள் சென்றனா். அப்போது, படுக்கையில் இருந்து தவறி விழுந்து வாணி ஜெயராம் நெற்றியில் லேசான காயத்துடன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, வாணி ஜெயராம் சடலத்தை போலீஸாா் மீட்டு, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். (எனக்கு சில சந்தேகங்கள் உண்டு .எதோ சொத்துக்காக நடந்த மரணம் ஆக நினைக்க வேண்டி உள்ளது )
திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்தனா். அதில், படுக்கையில் இருந்து தவறி விழுந்துதான் வாணி ஜெயராம் உயிரிழந்தாா் என்பது உறுதி செய்யப்பட்டது. தடயவியல் துறை நிபுணா்களும், வாணி ஜெயராம் வீட்டுக்கு வந்து தடயங்களை சேகரித்தனா். ஆயிரம்விளக்கு போலீஸாா் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 174-ன் கீழ், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கினா். 
வாணி ஜெயராம் கீழே விழுந்து தலையில் அடிபட்டதே உயிரிழப்பிற்கு காரணம் என உடற்கூராய்வு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் திருமணம் நடந்த அதே பிப்ரவரி 4-ம் நாள் வாணியின் உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது உடல்  (05/02/2023) பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் காவல் துறை சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
அதன் பின்னர் அவரது உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது
கர்நாடக சங்கீதம், திரை இசை, ஹிந்துஸ்தானி சங்கீதம் என்று, மூன்று தளங்களிலும் பயணித்த ஒரே பாடகி, இந்தியாவிலேயே வாணி ஜெயராம் மட்டும் தான். இந்த பெருமை, இந்தியாவிலேயே வேறு எந்த பின்னணி பாடகிக்கும் கிடையாது.
 பல ஈழ விடுதலைப் பாடல்களைப் பாடியிருக்கிறார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியவில்லை
பாடும் பறவைகள் வாருங்கள்…புலி வீரத்திலீபனை பாடுங்கள்….என்று தியாக தீபத்தின் தியாகத்தை உணர்வோடு பாடியஇசைக்குயில் வாணி ஜெயராம்..உயிர் பிரிந்ததாலும் ஓயாத அந்த இசைக் குயில் எப்போதும் மீண்டும் மீண்டுமாய் எங்கோ ஒரு மூலையில் ஒளி நாடாவில் இசைத்துக் கொண்டே இருக்கும்.
” வீசும் காற்றே தூது செல்லு தமிழ்.
நாட்டில் எழுந்தொரு செய்தி சொல்லு…” மேகங்களே இங்கு வாருங்கள்…எனப்பல எழுச்சி பாடல்களை பாடிய தென்னிந்திய பிரபல மூத்த பாடகி வாணி ஜெயராம், இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு காலப் பகுதியில் இருந்து,  விடுதலைப் பாடல்கள் பலவற்றை உணர்வுபூர்வமாக பாடி, விடுதலைக்கு உணர்வூட்டிய குரல் ஓய்ந்து போனது வேதனை தான் 
‘நல்லூர் வீதியில் நடந்தது யாகம்..
நாலு நாள் ஆனதும் சுருண்டது தேகம்..
தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை
திலீபனை பாடிட வார்த்தைகள் இல்லை’ என வரலாற்றில் தன் பாடல்கள் மூலம் பங்களிப்பு செய்த வாணி ஜெயராம் அம்மையாரை தமிழ்  மக்கள் என்றென்றும் நன்றியுடன் நினைவு கூறுவர்.
தமிழகத்தில் பலரும் பாடத் தயங்கிய சூழலில் துணிச்சலாகக் ‘களத்தில் கேட்கும் கானங்கள்’ இறுவட்டிற்காக ‘வீசும் காற்றே தூது செல்லு..தமிழ் நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு..ஈழத்தில் நாம் படும் வேதனைகள் – அதை
எங்களின் சோதரர் காதில் சொல்லு..
கத்திடக் கேட்டிடும் தூரமல்லோ..கடல்
கை வந்து தாங்கிடும் நீளமல்லோ.,
எத்தனை எத்தனை இங்கு நடந்திட
எங்களின் சோதரர் தூக்கமல்லோ..
இங்கு குயிலினம் பாட மறந்தது..
எங்கள் வயல் வெளி ஆடை இழந்தது..
இங்குள்ள பேய்களும் செய்ய மறந்ததை.. உங்களின் ராணுவம் செய்து முடிக்குது…எனும் உணர்ச்சிமிக்க பாடலைப் பாடி யது வாணி ஜெயராம் அவர்களே 
2007 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் எழுதிய “செண்பகமே  செண்பகமே ..சிறகை விரித்து வா.. என்ற பாடலை வாணி ஜெயராம் அவர்கள் அவருடைய இனிமையான குரலில் மிக அற்புதமாக பாடியிருக்கிறார். 
களத்தில் கேட்கும் கானங்கள் என்ற புலிகளின் பாடல்களை பெரும்பாலும் பாடியவர் இவரே 
 “பாடும் பறவைகள் வாருங்கள் ,
வீசும் காற்றே தூது செல்லு,
தென்னங் கீற்றில் தென்றல் வந்து மோதும்
என்கின்ற பாடல்கள் எனக்குப் பிடிக்கும் 
உங்களுக்கு எப்படியோ ? 

 

Manikkavasagar Vaitialingam
 

Leave a Reply