• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நான் குப்பையில் போட்ட கவிதைகளை வச்சி பெரிய ஆளானவன் வாலி!.. கோபத்தில் திட்டிய கண்ணதாசன்!..

சினிமா

தமிழ் சினிமாவில் அதிகமாக போற்றப்பட்ட கவிஞர்களில் முக்கியமானவர் கவிஞர் கண்ணதாசன். சினிமாவை குறித்து படிக்கும் பலருக்கும் கூட கண்ணதாசனுக்கு முன்பு யார் பெரிய கவிஞர் என்று யாருக்கும் தெரியாது.

அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு புகழை உருவாக்கிக் கொண்டவர் கண்ணதாசன். 

ஆனால் கண்ணதாசனுக்கு பிறகு நிறைய பேர் கண்ணதாசன் மாதிரியே பாடல் வரிகளை எழுதக்கூடியவர்களாக வந்தனர் அதில் முக்கியமானவர் கவிஞர் வாலி.

கண்ணதாசன் இருந்த சமகாலத்திலேயே வாலி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். வாலி எழுதிய பாடல் வரிகள் கண்ணதாசனின் பாடல் வரிகளை போலவே மிகவும் அர்த்தம் உள்ளதாக இருந்தது. எனவே கண்ணதாசனுக்கு நிகரான வாய்ப்பு வாலிக்கு கிடைக்க தொடங்கின.

ஆனால் வாலி ஒரு ஆரம்ப நிலை பாடலாசிரியர் என்பதால் குறைந்த சம்பளத்திற்கு தான் அவர் பாடல் வரிகளை எழுதி வந்தார். ஆனால் கண்ணதாசனோ அதிக சம்பளத்திற்கு பாடல் வரிகளை எழுதி வந்தார். எனவே கண்ணதாசனுக்கு சம்பளம் கொடுத்து பாடல் வரிகளை எழுதுவதற்கு பதிலாக வாலியை வைத்து எழுதிவிட்டால் பணம் மிச்சமாகும் என்று நினைத்த தயாரிப்பாளர்கள் தொடர்ந்து வாலிக்கு வாய்ப்புகள் கொடுக்க துவங்கினர்.

இதனால் கண்ணதாசனுக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கின. திரைத்துறையில் இருக்கும் பலரும் இதனால் வாலியை விமர்சிக்க துவங்கினர். இந்த நிலையில் ஒரு முறை கண்ணதாசனே இதனால் கோபமாகி நான் எழுதி குப்பையில் போட்ட கவிதைகளை படித்து வந்தவன் வாலி அவனை எனக்கு நிகராக வைத்து பேசுகிறார்கள்.

என்று வாலியை திட்டி விட்டார். இருந்தாலும் வாலி அதற்கு பெரிதாக எதுவும் பதில் அளிக்கவில்லை. பிறகு சில காலங்கள் கழித்து கண்ணதாசனுக்கு நிகரான ஒரு கவிஞராக வாலி உரு பெற்றார் 

அப்பொழுது கண்ணதாசன் ஒரு முறை மேடையில் பேசும்பொழுது கவிதையை பொருத்தவரை எனக்கு அடுத்து வாரிசு என்றால் அது வாலிதான் என்று அவரே வாலியை புகழ்ந்து பேசினார். 

இப்படி தன்னை இழிவாக பேசியவர்கள் அனைவரையும் தன்னை பற்றி புகழ்ந்து பேச வைத்தவர் கவிஞர் வாலி.

Leave a Reply