• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெற்றிமாறன், பொல்லாதவன் கதையை தனுஷிடம் சொல்லி முடித்தவுடன்

சினிமா

வெற்றிமாறன், பொல்லாதவன் கதையை தனுஷிடம் சொல்லி முடித்தவுடன், தனுஷ் வெற்றிமாறனை 10 தயாரிப்பாளர்களுக்கு மேல் கதை சொல்ல அனுப்பி வைத்திருக்கிறார். எல்லோருக்கும் கதை பிடித்திருந்து, ஏதோ ஒரு வகையில் அந்த ப்ராஜெக்ட் ஒரு சில வருடங்களாக தள்ளித்தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது.. நாட்கள் செல்ல செல்ல, தனுஷுக்கும் வெற்றிமாறனுக்குமே ஒரு அவநம்பிக்கை ஏற்படுகிறது.. 

ஒரு கட்டத்தில் வெற்றிமாறன், தனுஷிற்கு ஃபோன் செய்தால் ஃபுல் ரிங் போகிறது.. தனுஷ் எடுக்கவே இல்லை.. திரும்பவும் கூப்பிடவில்லை.. ஒரு காலகட்டத்தில் "திஸ் நம்பர் டஸ் நாட் எக்ஸிஸ்ட்" என்ற வாய்ஸ் கேட்க ஆரம்பிக்கிறது.. வெற்றிமாறனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. வேறு  ப்ராஜெக்ட்களில் ஈடுபடலாம் என்று மனதை தேற்றிக்கொண்டு, ஒரு சில மாதங்கள் வேறு ஏதேதோ வேலைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்.. அப்பொழுதுதான் தனுஷிடமிருந்து ஒரு கால்.. வேறொரு ப்ரொடியூஸரை பார்க்கலாம் என்று.... 

அணையப்போன நேரத்தில் திடீரென்று சிறு வெளிச்சம், அந்த விளக்கின் மீது விழுகிறது.. ஷூட்டிங் ஆரம்பிக்கிறது..   ஹீரோயின்  திவ்யாவை வைத்து 15 நாட்கள் ஷூட்டிங் முடித்தவுடன், வெற்றிமாறனுக்கும் திவ்யாவிற்கும் ஏதோ ஒரு சண்டை வர, "இனிமேல் இந்த படத்தில் நடிக்க மாட்டேன்" என்று கோபித்துக் கொண்டு திவ்யா வெளியே போய் விடுகிறார்..ப்ரொடியூஸர் எவ்வளவு சமாதானப்படுத்தியும் அவரால் திவ்யாவை  இந்த படத்திற்கு கொண்டுவர முடியவில்லை... 

வட சென்னையில் வில்லன் வீடு இருப்பதாக வெற்றிமாறன் காட்டியிருப்பார். இந்த இடத்தில் எப்படி ஒரு வில்லன் இருப்பான்? என்று தயாரிப்பாளர் நண்பர்கள் சிலர் பிரச்சினை செய்ய, அன்றைய நாள் ஷூட்டிங்கே நடைபெறாமல் கேன்சல் ஆகி இருக்கிறது.. 

இந்த படத்தில் காமெடியே இல்லை. காமெடி கொஞ்சம் வைத்தால்தான் எடுபடும் என்று தயாரிப்பாளர் தரப்பு சொல்ல, வெற்றிமாறனுக்கு தர்ம சங்கடமாக இருக்கிறது.. வெற்றிமாறன் எழுத்தில் இல்லாமல், முழு காமெடி போர்ஷனையும் கதைக்குள் கொண்டு வந்தது சந்தானம்தான்..  

இது எல்லாவற்றையும் விட உச்சமாக, "இந்த படத்திற்கு ஏதாவது மாஸாக டைட்டில் வைக்கலாம்" என்று தம்பிக்கு எந்த ஊரு போன்ற தலைப்பை வெற்றிமாறனிடம் தயாரிப்பாளர் சொல்லி இருக்கிறார்.. அப்படி பேர் வைக்கிறதுக்கு 'பொல்லாதவன்'னே பேர் வைக்கலாம் என்று நக்கலாக வெற்றிமாறன் சொல்ல, ப்ரொடியூஸருக்கும், தனுஷுக்கும் இந்த பெயர் மிகவும் பிடித்து விட்டது.. அவர்கள் அந்த தலைப்புதான் வேண்டும் என்று சொல்கிறார்கள்.. வெற்றிமாறன் மிகுந்த கோபத்தில், "கதைக்கு சம்மந்தமே இல்லாமல் இப்படி ஒரு தலைப்பை இந்த படத்திற்கு வைக்க முடியாது என்று வம்படியாக நிற்கிறார்.. எனக்கு விருப்பமே இல்லாத டைட்டிலுடன்தான் என் படம் வெளியானது என்று வருத்தப்பட்டிருக்கிறார் வெற்றிமாறன்..

இப்படி பல இடியாப்பச்சிக்கல்களுடன் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம்தான் "பொல்லாதவன்".. எத்தனை வலிகளைத் தாங்க முடியுமோ, அத்தனையும் தாங்கித்தான் இந்த படத்தை ஆரம்பித்திருக்கிறார் வெற்றிமாறன்...

பாலு மகேந்திரா அவர்களுடனான  முதல் சந்திப்பில் ஆரம்பித்து, அவருடன் முரண்பட்டு  சண்டையிட்டு, மீண்டும் சமாதானமாகி, அவரால் பட்டைதீட்டப்பட்ட ஒரு ராணிப்பேட்டை பையன், வெனிஸ் திரைப்பட விழா வரை சென்ற போராட்ட களத்தை சொல்லும் நூல்தான், இந்த மைல்ஸ் டூ கோ.. 

சினிமா வாய்ப்பு தேடும் அனைவருக்கும் ஒரு சிறந்த மோட்டிவேஷனல் புத்தகமாக இருக்கும்..வாய்ப்பு இருக்கிறவர்கள் கண்டிப்பாக இந்த புத்தகத்தை படியுங்கள்.

Aarvaa
 

Leave a Reply