• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரூ 600 கோடியை நன்கொடையாக அள்ளிக்கொடுத்த நபர்... மலைக்கவைக்கும் அவரது சொத்துமதிப்பு 

இந்திய மென்பொருள் வர்த்தகத்துறையில் மிகவும் பிரபலமான பெயர்களில் ஒன்று அசோக் சூதா. 80 வயதான அசோக் சூதா தற்போதும் புதிய தலைமுறையினருக்கு ஈடாக செயல்பட்டு வருகிறார்.

பொறியியல் மற்றும் எம்.பி.ஏ பட்டதாரியான சூதா 1985ல் பெரும் கோடீஸ்வரரான Azim Premji-யின் Wipro நிறுவனத்தை முன்னெடுத்து நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

1999ல் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் வரையில் தலைவராக செயல்பட்டு,  அதன் அசுர வளர்ச்சிக்கு முதன்மை காரணமாக இருந்தார். அதன் பின்னர் அசோக் சூதா நான்கு நிறுவனங்களை உருவாக்கி, சாதித்துள்ளார்.

அதில் இரண்டு நிறுவனங்கள் வெற்றிகரமாக IPO அந்தஸ்து பெற்றது. Subroto Bagchi மற்றும் Krishnakumar Natarajan உள்ளிட்ட 9 முன்னாள் மென்பொருள் வல்லுநர்களுடன் இணைந்து Mindtree என்ற மென்பொருள் நிறுவனத்தை அசோக் சூதா தொடங்கினார்.

2006ல் இந்த நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. 2011ல் Mindtree நிறுவனத்தில் இருந்து விலகிய அசோக் சூதா, பின்னர் இன்னொரு நிறுவனத்தை துவங்கினார். அந்த நிறுவனமும் 2020ல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.

2021ல் SKAN நிறுவனத்துடன் இணைந்து சுகாதாரத்துறையில் அசோக் சூதா கால்பதித்தார். 2022ல் தமது 79வது வயதில் Happiest Health என்ற நான்காவது நிறுவனத்தை தொடங்கினார். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தையும் பங்குச்சந்தையில் பட்டியலிடும் வகையில் வளர்ச்சிக்கு கொண்டுவர இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பெரும் நன்கொடையாளர்கள் வரிசையில் இணைந்துள்ள அசோக் சூதா, மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு என மட்டும் ரூ 600 கோடியை அள்ளிக்கொடுத்துள்ளார்.

2022ல் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், அசோக் சூதாவின் மொத்த சொத்துமதிப்பானது ரூ 9,000 கோடி என்றே தெரியவந்துள்ளது.
 

Leave a Reply