• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தொடர்பில் தீர்மானம்

இலங்கை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை முற்றாக நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கையை கோட்டை நீதவான் கோசல சேனாதீர இன்று (புதன்கிழமை) நிராகரித்துள்ளார்.

அஜித் நிவாட் கப்ராலின் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நிரந்தரமாக நீக்குமாறு கோரி சட்டத்தரணி திலின வீரசிங்க பிரேரணை மூலம் விடுத்த கோரிக்கையை நிராகரித்த போதே நீதவான் இதனை தெரிவித்தார்.

விசாரணைகளின் படி அவர் எந்த நேரத்திலும் சந்தேக நபராக பெயரிடப்படலாம் எனவும் அவர் வெளிநாடு சென்றால் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படலாம் எனவும் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த போது பொது நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த முறைப்பாடு தொடர்பில் அவருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

2014 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் மத்திய வங்கியின் நிதிச் சபை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக தினியாவல பாலித தேரர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply