• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடன் மறுசீரமைப்பை விரைவில் நிறைவுறுத்தத் தீர்மானம் – அலி சப்ரி

இலங்கை

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையை ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார்.

முழுமையான கடன் மறுசீரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுப்பதன் மூலம் இலங்கையின் கடன் சுமையை 17 பில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைக்க முடியும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கடன் தவணையைப் பெற்ற பின்னர் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தொடர முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற்றி அனைத்து நாடுகளுடனும் உறவுகளைப் பேணி இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாத்து வருவதனால் இலங்கைக்கு பல சலுகைகள் கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சீனா மற்றும் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கு அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டினார்.

மேலும் மியான்மாரில் உள்ள இளைஞர்களைக் காப்பாற்ற இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் சட்டபூர்வமற்ற முறையில் ரஷ்யா – உக்ரைன் யுத்தம் சார்ந்த கூலிப்படைக்கு அனுப்பப்பட்டுள்ள நமது இளைஞர்களை காப்பாற்ற இராஜதந்திர ரீதியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply