• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டயானா கமகேவின் வெற்றிடத்திற்கு முஜிபுர் ரஹ்மான் நியமனம்

இலங்கை

டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.

அதன்படி முஜிபுர் ரஹ்மானின் பெயர் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட உள்ளது.

கடந்த தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவான முஜிபுர் ரஹ்மான், உள்ளுராட்சி தேர்தலில் கொழும்பு மேயர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக அந்த பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply