• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விண்வெளியில் 878 நாட்கள் வாழ்ந்து ரஷ்ய விண்வெளி வீரர் சாதனை

விண்வெளியில் அதிக நேரம் தங்கியவர் என்ற சாதனையை ரஷ்ய விண்வெளி வீரர் ஒலெக் கொனோனென்கோ (Oleg Kononenko) படைத்துள்ளார்.

கோனோனென்கோ விண்வெளி சுற்றுப்பாதையில் 878 நாட்கள் (கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள்) கழித்தார். 

ஒலெக் ரஷ்யாவைச் சேர்ந்த சக விண்வெளி வீரர் ஜெனடி படல்காவின் (Gennady Padalka) சாதனையை முறியடித்தார்.

Gennady 878 நாட்கள், 11 மணி நேரம், 29 நிமிடங்கள் மற்றும் 48 வினாடிகள் விண்வெளியில் தங்கியிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் Oleg இந்த சாதனையை முறியடித்தார்.

ஜூன் 5-ஆம் திகதிக்குள், Kononenko விண்வெளியில் 1000 நாட்களை முடித்த நபர் என்ற சாதனையை செய்வார். அ தற்குப் பிறகுதான் அவர் பூமிக்குத் திரும்புவார்.

தற்போது பூமியிலிருந்து 263 மைல் (423 கிமீ) தொலைவில் உள்ள விண்வெளி நிலையத்தில் இருக்கிறார்.

“எனது ஆசைக்காக நான் விண்வெளிக்கு வந்தேன். சாதனை செய்வது எனது நோக்கமல்ல. எனது அனைத்து சாதனைகளிலும் நான் பெருமைப்படுகிறேன். ஆனால், விண்வெளியில் அதிக காலம் தங்கியவர் என்ற சாதனையை இன்னும் ரஷ்ய குடிமகன் வைத்திருப்பது இன்னும் பெருமையாக உள்ளது," என்று அவர் கூறியுள்ளார்.

Oleg Kononenko 2008-இல் தனது முதல் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். அவர் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளிப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

சர்வதேச விண்வெளி நிலையம் Russia, USA, Europe, Japan மற்றும் Canada ஆகிய நாடுகளால் இயக்கப்படுகிறது.

மற்ற விடயங்களில் பிரச்சனைகள் இருந்தாலும், ரஷ்யாவும் அமெரிக்காவும் விண்வெளி நிலையத்தில் ஒத்துழைத்து வருகின்றன.
 

Leave a Reply