• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நம்பியாரை தாக்க முயற்சி... வீட்டில் குவிந்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள் : காரணம் என்ன...?

சினிமா

எம்.ஜி.ஆருக்கு அசோகன் பி.எஸ்.வீரப்பா எம்.ஆர்.ராதா உள்ளிட்ட பலர் வில்லனாக நடித்திருந்தாலும், நம்பியார் மட்டுமே எம்.ஜிஆருக்கு டஃப் கொடுக்கும் வில்லனாக ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார்.

நம்பியாரை தாக்க முயன்ற எம்.ஜி.ஆர் ரசிகர்கள்..!

நாடக துறையில இருந்து சினிமாவுக்கு வநது ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர். தொடக்கத்தில் துணை வேடங்களில் நடித்து அதன்பிறகு ஹீரோவான எம்.ஜி.ஆர் பல தடைகள், அவமானங்களை சந்தித்து தான் பின்னாளில் பெரிய ஹீரோவாக வளர்ந்தார். இவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று நடிகைகள் பாதியில் வெளியேறிய சம்பவங்கள் கூட நடந்துள்ளது.

எந்த தடைகளையும் பொருட்படுத்தால் தனது முன்னேற்றத்தில் கவனம் செலுத்திய எம்.ஜி.ஆர் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். இவரின் சமகாலத்தில் திரைத்துறையில் கால் பதித்தவர் தான் நம்பியார். நாடகங்களில் நடித்து சினிமாவிற்கு வந்த நடிகராக இவர் எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடித்தபோது அவருக்கு வில்லனாக நடித்து அசத்தியவர்.

எம்.ஜி.ஆருக்கு அசோகன் பி.எஸ்.வீரப்பா எம்.ஆர்.ராதா உள்ளிட்ட பலர் வில்லனாக நடித்திருந்தாலும், நம்பியார் மட்டுமே எம்.ஜிஆருக்கு டஃப் கொடுக்கும் வில்லனாக ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார். அதே சமயம் எம்.ஜி.ஆர் நம்பியார் இருவரும் சமகாலத்தில் சினிமாவுக்கு வந்தததால் இருவருக்கும் இடையே ஆழமான நட்பும் இருந்துள்ளது. ஆனால் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு பிடிக்காத ஒரு நடிகர் என்றால் அது நம்பியார் தான்.

படத்தில் எம்.ஜி,ஆரிடம் அடிக்கடி சண்டை போடுவதால் நிஜவாழ்க்கையில் அவரின் ரசிகர்களிடம் சிக்கி பல இன்னல்களை சந்தித்த நம்பியாரை ஒருமுறை எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வீடு புகுந்து தாக்க முயற்சித்த சம்பவங்கள் கூட நடந்துள்ளது. பொதுவாக படங்களில் எம்.ஜி.ஆர் அடிவாங்குவதையோ , அல்லது அவர் இறப்பது போன்ற காட்சிகளையே அவரது ரசிகர்கள் விரும்புவதில்லை. இதில் 1965-ம் ஆண்டு வெளியான எங்க வீட்டு பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர் கோழை வீரன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

இதில் கோழை எம்.ஜி.ஆரின் மாமாவாக நடித்த நம்பியார் எம்.ஜி.ஆரை சவுக்கால் அடித்து துன்புறுத்துவார். இந்’த காட்சியை படத்தில் பார்த்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அடுத்து என்ன காட்சி என்று கூட யோசிக்காமல் தியேட்டரில் இருந்து கிளம்பி நம்பியார் வீட்டுக்கு சென்று வெளியே வா என்று கத்தி கூச்சலிட்டுள்ளனர். இதனால் பதறிப்போன நம்பியார் உடனடியாக எம்.ஜி.ஆருக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல, உடனடியாக எம்.ஜி.ஆர் நம்பியார் வீட்டுக்கு வந்து இப்படி செய்வது மிகவும் தவறு என்று ரசிகர்களை அமைதிபடுத்தியுள்ளார்.

மேலும் நம்பியார் என்னை அடித்ததை தானே பார்த்தீர்கள் அடுத்து நான் அவரை அடித்தேனே அதை பார்க்கவில்லையா. அந்த காட்சி அடுத்து படத்தில் வருகிறது. அதை பாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்துள்ளார். இப்போது எம்.ஜி.ஆர் இல்லை என்றாலும் அவரை ரசிக்கும் ரசிகர்கள் கூட்டம் இன்னும் இருக்கிறது.
 

Leave a Reply