• Welcome to TamilsGuide
செய்திகள் 1

2 நாள் படப் பிடிப்புடன் நின்று போன சிவாஜி படம் - ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் தடுத்தது காரணமா?

சினிமா

வெண்ணிற ஆடை படத்தின் படப்பிடிப்பில் இருந்த ஸ்ரீதர் அந்த படம் முடிந்ததை தொடர்ந்து, புதிய கதை ஒன்றை படமாக்க திட்டமிட்டு எழுதிய கதைதான் ஊட்டி வரை உறவு.

சிவாஜி நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு 2 நாட்களில் நின்று போனதால், அந்த படத்தில் நாயகியாக நடித்த ஜெயலலிதாவை சிவாஜி படத்தில் நடிக்க கூடாது என்று எம்.ஜி.ஆர் கட்டளையிட்டதால் தான் படப்பிடிப்பு நின்றுபோனது என்று கூறப்பட்டது. இது உண்மையா?

தமிழ் சினிமாவின் புதுமை இயக்குனர் ஸ்ரீதர், தனது நெருங்கிய நண்பர் கோவை செழியனுக்காக இயக்கிய படம் சுமைதாங்கி. இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்று தந்தாலும் வசூல் ரீதியாக படம் பெரிய வசூலை ஈட்டவில்லை. இதனால் தனக்கு மீண்டும் ஒரு படம் இயக்கி தர வேண்டும் என்று கோவை செழியன் சொல்ல, அதற்கு ஸ்ரீதரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

அப்போது வெண்ணிற ஆடை படத்தின் படப்பிடிப்பில் இருந்த ஸ்ரீதர் அந்த படம் முடிந்ததை தொடர்ந்து, புதிய கதை ஒன்றை படமாக்க திட்டமிட்டு எழுதிய கதைதான் ஊட்டி வரை உறவு. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற நிலையில், எடுத்தவரை எப்படி இருக்கிறது என்று போட்டு பார்த்த ஸ்ரீதருக்கு படம் அவர் நினைத்த மாதிரி வரவில்லை. இதனால் படம் நான் நினைத்த மாதிரி வரவில்லை இந்த படத்தை கைவிட்டு விடலாம் என்று கோவை செழியனிடம் கூறியுள்ளார்.

இயக்குனரே இப்படி சொல்கிறார் என்றால், அதில் அர்த்தம் இருக்கும் என்று புரிந்துகொண்ட கோவை செழியன், வேறு கதை எழுதி படமாக்கலாம் என்று ஸ்ரீதர் சொன்னதற்கு ஒப்புக்கொண்டார். அடுத்து சில நாட்களில் காலமெல்லாம் காத்திருப்பேன் என்ற கதையை எழுதி சிவரீ, கே.ஆர்.விஜயா ஆகிய இருவரையும் வைத்து படமாக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2 நாட்கள் நடைபெற்ற நிலையில், எடுத்த வரை போட்டு பார்த்துள்ளனர்.

இந்த முறை, தயாரிப்பாளர் கோவை செழியனுக்கு படம் பிடிக்கவில்லை. ஸ்ரீதர் உங்கள் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த படம் வேண்டாம் வேறு ஒரு நல்ல கதை எழுதுங்கள் என்று சொன்னதால், படம் 2 நாட்களில் நின்றுபோனது. இதற்கு அடுத்து ஸ்ரீதர் வேறு கதை எழுத சென்றிருந்தாலும், சிவாஜி ஜெயலலிதா ஜோடியாக நடித்ததால், எம்.ஜி.ஆர் இதில் தலையிட்டு சிவாஜிக்கு ஜோடியாக நடிக்க கூடாது என்று ஜெயலலிதாவிடம் சொல்லிவிட்டார். அதனால் தான் படப்பிடிப்பு நின்றுபோனது என்று பேசியுள்ளனர்.

இந்த பேச்சு பெரிதளவில் பேசப்பட்ட நிலையில், அடுத்த ஒரு வாரம் முழுவதும் இந்த படத்தில் ஜெயலலிதா நடிக்கவில்லை என்று விளக்கம் சொல்வதே ஸ்ரீதரின் வேலையாக இருந்துள்ளது.

தமிழச்சி கயல்விழி

Leave a Reply