• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முதல் படத்தில் 90 ரூபாய் சம்பளம் - இதை நம்பி ரயில்வே வேலையை ராஜினாமா செய்த நாகேஷ்

சினிமா

எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினி கமல், விஜயகாந்த், சூர்யா சிம்பு வரை 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் வாலி.

90 ரூபாய் சம்பளத்திற்காக தான் பார்த்துக்கொண்டிருந்த ரயில்வே வேலையை விட்டு விட்டு சினிமாவுக்கு வந்தவர் நாகேஷ் என்று கவிஞர் வாலி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. எம.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினி கமல், விஜயகாந்த், சூர்யா சிம்பு வரை 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர். ஆனாலும் தொடக்கத்தில் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

அந்த காலக்கட்டத்தில், நண்பர் ஒருவர் நடித்த படத்தின் படப்பிடிப்புக்கு சென்றிருந்த வாலி, நாகேஷை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையேயான முதல் சந்திப்பே மோதலில் முடிந்திருந்தாலும், பின்னாளில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக ஒரே அறையில் தங்கி வாய்ப்பு தேடியுள்ளனர். அதன்பிறகு சினிமாவில் மெல்ல மெல்ல நாகேஷ் நடிகராகவும், வாலி கவிஞராகவும் வாய்ப்பினை பெற்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரங்களாக உருவெடுத்தனர்.

இந்நிலையில், கவிஞர் வாலி அளித்த பேட்டி ஒன்றில், நானும் நாகேஷூம் ரொம்ப கஷ்டப்பட்டோம். எங்கள் இருவருக்குமே பணக்கார பின்னணி கொண்ட குடும்பங்கள் தான் இருந்தது. ஆனாலும் இஷ்டப்பட்டு நாங்கள் கஷ்டப்பட்டோம். நாகேஷ் நடித்த ஒரு படம் தாமரைக்குளம். அதில் 2 காட்சிகள் மட்டுமே நடித்திருப்பான். அதற்காக அவனுக்கு கொடுத்த சம்பளம் ரூ90. இந்த சம்பளத்தை நம்பி நாகேஷ் தான் பார்த்துக்கொண்டிருந்த ரயில்வே வேலையை ராஜினாமா செய்துவிட்டான் என்று கூறியுள்ளார்.
 

Leave a Reply