• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையின் அபிவிருத்திக்கு தனது முழுமையான உதவிகள் கிடைக்கும்-சந்தோஷ் ஜா

இலங்கை

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களை இந்திய தூதரகத்தில் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தின் அபிவிருத்திக்கு தேவையான உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தது.

மேலும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள் இலங்கையின் அபிவிருத்திக்கு தனது முழுமையான உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply