• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவின் கரையோர மாகாணங்களில் சீரற்ற காலநிலை  

கனடா

கனடாவின் கரையோர மாகாணங்களில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.

குறிப்பாக நோவா ஸ்கோஷியாவில் பனிப்புயல் நிலைமை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாகாணம் முழுவதிலும் கடுமையான பனி;ப்பொழிவு நிலைமை பதிவாகியுள்ளது.

சில பகுதியில் 20 முதல் 40 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.

பிரின்ஸ் ஒப் எட்வர்ட் பிராந்தியத்திலும் கடுமையான பனிப்பொழிவு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பனி;ப்பொழிவு காரணமாக விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாக பல பிராந்தியங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a Reply