• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜிஆர் ஜானகி அவர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்து சாட்சி கையெப்பம் இட்ட ஒரே நபர்

சினிமா

சாண்டோ MMA சின்னப்பா தேவர் எம்.ஜிஆர் ஜானகி அவர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்து சாட்சி கையெப்பம் இட்ட ஒரே நபர் இவர்.

தேவர் தலைவரை ஆண்டவரே என்றும் தலைவர் தேவரை முதலாளி என்று செல்லமாக அழைத்து கொள்வார்கள் .
பல வீர தீர சாகசங்கள் வாள் கத்தி கம்பு என பல சண்டை பயிற்சிகள் இருவருமே கற்று தேர்ந்தவர்கள் என்றாலும் வில்லன் வேடம் ஏற்று நடிக்க வந்த தேவருக்கு சினிமா தயாரிக்க ஆசை வந்தது.
கதையும் ரெடி யாரை வைத்து படம் எடுப்பது என்று சிந்தனையில் இருக்கும் போது ஆண்டவனை கேட்டால் என்ன? எம்ஜிஆர் அதுக்கு ஒத்துக்கொள்வாரா? என்று தயங்கியவருக்கு  நான்  தயார் என்று  எம்.ஜி.ஆர்‌ கூறி பல வெற்றிப் படங்களுக்கு வித்திட்டவர் எம் ஜி ஆர்
அவர்கள்.

கதாநாயகி புதியவர் யாராவது எடுத்துக்கொள்ளலாம் என்று எண்ணிய தேவருக்கு முண்ணணி நடிகை பானுமதியின் கால் சீட் வாங்கி கொடுத்து தேவரை ஆனந்த எல்லைக்கே கொண்டு சேர்த்தவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 
தேவர் பிலிம்ஸின் முதல் படம் தாய்க்குப்பின் தாரம் என்ற வெற்றி படத்தை தொடர்ந்து 16 வெற்றி படங்களை நடித்து கொடுத்தார் எம்.ஜி‌ஆர்.அவர்கள்
சிவாஜியை வைத்து ஒரு படம் கூட
எடுக்க வில்லை தேவர் அவர்கள் .
சினிமா உலகில் சரிவை சந்தித்து கொண்டிருக்கும் தேவரை அழைத்து கடைசியாக நல்ல நேரம் என்ற கலர் படத்தை உருவாக்கி தேவர் அடைந்த நஷ்டங்களை ஈடேற செய்தார் 
நமது பொன்மனச்செம்மல்
சினிமா உலகில் சொந்த படம் எடுத்து தேவரை போல் வெற்றி கண்டவர் இது வரை யாரும் இல்லை‌.
அதற்கு காரணம் மக்கள் திலகம் தான்.
சினிமாவில் இருந்து அரசியலில் வெற்றி கண்ட எம்ஜிஆர் போல் யாரும் இது வரை யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Rj Nila

Leave a Reply