• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜெமினி, சாவித்திரியின் தீவிரக் காதலுக்கு இவ்வளவு தடைகளா? ஆனா தடை போட வேண்டியவர் போடலையே..!

சினிமா

சாவித்திரியும், ஜெமினிகணேசனும் காதல் மணம் புரிந்தவர்கள். ஜெமினிகணேசன் ஏற்கனவே திருமணம் செய்து இருந்தது தெரிந்தும் நடிகை சாவித்திரி அவரை தீவிரமாகக் காதலித்து வந்தாராம். இந்த விஷயம் தெரிந்ததும் அவரது அப்பா அவரை வீட்டுச்சிறையில் வைத்தாராம்.

மனம் போல் மாங்கல்யம் படத்தில் நடிக்கும் போது தான் ஜெமினி, சாவித்திரி காதல் மலர்ந்தது. அந்தப் படத்தை இயக்கியவர் புல்லையா. ஒரு நாள் அந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஜெமினிகணேசன் தாமதமாக வந்தாராம். அவர் வரும் வரை சாவித்திரியும் நடிக்காமல் அடம்பிடித்தாராம். ஜெமினி கணேசன் வந்ததும் அவரைக் கட்டிப்பிடித்து அழுதாராம். இவர்களது காதல் திருமணத்திற்குப் பெரிதும் தடையாக இருந்தவர் சாவித்திரியின் பெரியப்பா சவுத்ரி.

இயக்குனர் புல்லையாவுக்கு சாவித்திரி மீது மகள் போல பாசம் அதிகமாம். அதனால் அவர் சவுத்ரியை அழைத்து திருமணம் குறித்து பேச ஆரம்பித்தாராம். அதற்கு அவர் ஒத்துழைக்காமல் மறுப்பு தெரிவித்து விட்டு சட்டென போய்விட்டாராம். அப்போது ஜெமினியைப் பற்றி அவருக்கு ஏற்கனவே ரெண்டு கல்யாணம் ஆகியிருக்கு. அவருக்கு என் பொண்ணை கல்யாணம் செய்து கொடுக்க சொல்கிறீர்களா என்றும் கோபப்பட்டாராம்.

புல்லையாவும் வீட்டிற்கு வந்து சாவித்திரிக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தாராம். ஜெமினியைப் பற்றி பல அவதூறுகளையும் சொன்னாராம். ஆனால் அவர் தான் என் கணவர் என்பதில் உறுதியாக இருந்தாராம் சாவித்திரி. அதற்காக அவர் பலமுறை சவுத்ரியிடமும் அடி வாங்கினாராம்.

தனது சொந்த வேலைகளுக்காக சவுத்ரி ஆந்திரா சென்ற போது சாவித்ரி, ஜெமினியுடன் கொடைக்கானலுக்குச் சென்றாராம். இது தெரிந்ததும் சவுத்ரிக்கு ஆத்திரம் அதிகமாக வந்து சாவித்ரியை சூட்டிங்கிற்கேப் போக விடாமல் தடை விதித்தாராம். சொந்த வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டாராம் சாவித்ரி. அப்போது கடும் புயல், மழை காரணமாக வீட்டின் கதவு இரவில் திறந்து கொண்டதாம்.

கொட்டும் மழையில் ஜெமினி கணேசனின் வீட்டுக்குச் சென்றாராம். அங்கு கதவைத் திறந்தவர் அவரது முதல் மனைவி பாப்ஜி. அவருக்கும் சாவித்திரி ஜெமினி காதலைப் பற்றி தெரியுமாம். வீட்டுக்குள் அழைத்து டவலை எடுத்து சாவித்திரியிடம் கொடுத்தாராம் பாப்ஜி. தனது கணவருக்கு எப்போதும் தன்னால் தொந்தரவு வந்துவிடக்கூடாது என்று நினைத்தாராம் பாப்ஜி. ஜெமினி கணேசன் தன் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கக் காரணமும் அவர் தான்.

மேற்கண்ட தகவலை பிரபல சினிமா விமர்சகர் சித்ரா லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply