• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரே ஒரு பொய் சொன்ன சரோஜா தேவி - வசமாய் பழி வாங்கிய பிரபல இயக்குனர்

சினிமா

புதுமை இயக்குனர் என்று அழைக்கப்படும் ஸ்ரீதர் 1959-ம் ஆண்டு கல்யாண பரிசு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் புதுவை இயக்குனர் என்று பெயரெடுத்தவர் ஸ்ரீதர். 1954-ம் ஆண்டு வெளியான ரத்த பாசம் என்ற படத்தின் மூலம் கதாசிரியராக சினிமாவில் நுழைந்த இவர்,  அடுத்து எதிர்பாராதது, மகேஷ்வரி, லட்சாதிபதி, அமர தீபம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை திரைக்கதை எழுதியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து 1959-ம் ஆண்டு கல்யாண பரிசு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தின் கதையை தனது நண்பர்களிடம் சொன்னபோது, நீ ஏற்கனவே செய்த அமர தீபம் படத்தின் கதையும் இதேதான். அதையே ஏன் திரும்பவும் எடுக்கிறாய் என்று கேட்க, அந்த படத்தின் கதையை அப்படியே வைத்துக்கொண்டு பல காட்சிகளை மாற்றியுள்ளார்.

அதன்பிறகு இந்தப படத்தின் கதையை வேறு நிறுவனத்திடம் சொல்ல அவர்களுக்கும் இந்த கதை பிடிக்கவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாத ஸ்ரீதர் தனது நண்பர்களான சித்ராலயா கோபு உள்ளிட்ட சிலரிடம் இந்த கதையை சொல்ல, அவர்களுக்கு கதை பிடித்திருந்தது. இதையா வேண்டாம் என்று சொன்னார்கள், இந்த கதையை நீயே படமாக்கலாமே என்று கூறியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஒருநாள் ஸ்ரீதரை அழைத்த அவரது நண்பர் கதை என்னாச்சு என்று கேட்க, முன்பு சொன்ன அதே கதைதான் இந்த கதை வெற்றி பெறும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று சொல்ல, வேறு வழி இல்லாமல், இந்த கதையை பிடிக்கவில்லை என்றாலும் தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளார் அவரின் நண்பர் கிருஷ்ணமூர்த்தி. அதன்பிறகு படத்தை ஸ்ரீதர் இயக்கட்டும் என்று நண்பர்கள் கூறியுள்ளனர்

அதற்கும் கிருஷ்ண மூர்த்தி ஒப்புக்கொண்டாலும், அவர் அரைமனதுடன் ஒப்புக்கொண்டார் என்று நினைத்த ஸ்ரீதர் முதலில் நான் சில நாட்கள் படத்தை இயக்குகிறேன். அதை போட்டு பார்ப்போம் நன்றாக இருந்தால் தொடர்ந்து இயக்குகிறேன். இல்லை என்றால் வேறு இயக்குனரை பார்ப்போம் என்று சொல்ல, அதற்கு ஒப்புக்கொண்டு படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்தின் நாயகியாக சரோஜா தேவி ஒப்பந்தம் செய்யப்படுகிறார்.

அதன்பிறகு படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில், எடுத்தவரை படத்தை போட்டு பார்த்தபோது, அனைவருக்கும் படம் பிடித்திருந்தது. இதனால் ஸ்ரீதரே படத்தை இயக்கட்டும் என்று முடிவு செய்துள்ளனர். ஆனாலும் தனது இயக்கத்தில் சில குறைகளை கண்ட ஸ்ரீதர், அதை சரி செய்துகொண்டு அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு தயாரானார். படப்பிடிப்பு முடிந்து அனைவரும் படத்தை பார்த்துள்ளனர்.

படத்தை பார்த்த கிருஷ்ணன மூர்த்திக்கு படத்தின் க்ளைமேக்ஸ் பிடிக்கவில்லை என்றாலும் ஸ்ரீதர் கொடுத்த நம்பிக்கை காரணமாக ஒப்புக்கொண்டார். இந்த படம் வெளியானபோது கேசினோ தியேட்டரில் தனது நண்பர்களுடன் ஸ்ரீதர் படம் பார்த்துள்ளார். படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழில் இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், இந்த படத்தை தெலுங்கில் இயக்க ஸ்ரீதர் முடிவு செய்கிறார்.

இந்த படத்திலும் ரோஜா தேவியே நாயகியாக நடித்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின்போது, சரோஜா தேவி ஒருநாள் தனக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் படப்பிடிப்புக்கு வர முடியாது என்று சொல்ல, ஸ்ரீதரும் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சில நாட்கள் கழித்து படப்பிடிப்பை நடத்தியுள்ளார். இறுதி நாள் படப்பிடிப்பின்போது ஸ்ரீதரை சந்தித்த சரோஜா தேவி மீண்டும் சந்திப்போம் என்று கூறியுள்ளார். .

அடுத்து இந்தியில் தயாராக உள்ள கல்யாண பரிசு படத்திலும் தான் தான் நாயகி என்று நினைத்து சரோஜா தேவி மீண்டும் சந்திப்போம் என்று சொல்ல, இந்தியில் உங்களை தான் நாயகியாக கமிட் செய்ய இருந்தேன். ஆனால் அன்று உடல்நிலை சரியில்லை என்று சொல்லிவிட்டு வேறு படப்பிடிப்புக்கு சென்றீங்களே அது என்னை பாதித்துவிட்டது. என்னிடம் சொல்லிவிட்டு சென்றிருக்கலாம். ஆனால் நீங்கள் சொல்லவில்லை. அதனால் இந்தி பதிப்பில் உங்களை கமிட் செய்ய நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

நன்றி:தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின்

Leave a Reply