• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மரிக்கார்

இலங்கை

இலங்கையில் மரிக்கார் என்ற பெயரினை இசுலாமிய மக்கள் சிலரிடம் காணலாம். சிறந்த எடுத்துக்காட்டு - வானொலி நாடகங்களில் வரும் 'மரிக்கார் ' இராமதாசு ( படம் காண்க). 'மரிக்கார்' என்ற சொல்லானது முசுலீம்களினிடையே புழங்கி வந்தாலும்,  அச் சொல்லின் மூலத்தினைச் சிங்களத்தின் வழியே காண்பவர்களுமுள்ளனர்( மரக்கல மினிச்சு/ மார்க்கர்)  ,  அதே போலவே மலையாளத்தின் வழி காண்பவர்களுமுள்ளனர் ( மரக்கான்); ஆனால் இச் சொல்லின் மூலம் தமிழே.  

ஒ.கே. நம்பியார் மரக்கலத்தினை ஓட்டியவர்களே 'மரக்கார்' என அழைக்கப்பட்டதாகக் கூறுகின்றார் ( The Kunjalis Admirals of Calicut by O.K.Nambiar). இங்கு இவர் மரக்கலன் ஓட்டிய இந்தியர்களில் பின்னர் இசுலாமிய மதத்தினைத் தழுவியவர்களும் ,  அதே போன்று வணிகத்துக்காக மரக்கலன் ஓட்டி வந்து இங்கு மணம் முடித்த அராபியர்களும் 'மரக்கார்' ( Marakkar) ஆனதாகக் குறிப்பிடுகின்றார்.  மரம் , கலன் ( மரக்கலன்) ஆகிய இரு தமிழ்ச் சொற்களை அடியாகக் கொண்டமைந்ததே 'மரக்கார்' என்ற சொல் என்பதனையும் நம்பியார் கூறுகின்றார்.  

கொற்கை பற்றி எழுதிய மா. இராசமாணிக்கனார் செப்பேடு ஒன்றில் 'மரக்கலராயர் ' எனும் சொல் குறிப்பிட்டப்பட்டுள்ளதனைக் குறிப்பிட்டு, மேலும் பின்வருமாறு கூறுகின்றார் ???? 'கடல் வணிகத்துக்காக மரக் கலன்களை வைத்திருந்தவர் 'மரக்கலராயர்' எனப் பெயர் பெற்றார்; மரக்கலராயர் என்பதன் திரிபே 'மரைக்காயர் ' என்கின்றார்.   இங்கு மரம் என்பது தெரிந்ததே; 'ராயர்' என்பது அரையர் ( தலைவர்/ அரசர்) என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு.  

எனவே' மரிக்கார் ' என இலங்கையிலும்; மரக்கார் என இந்தியாவிலும் புழங்கப்படும் சொற்களின் மூலம் தமிழே.

இலங்கநாதன் குகநாதன்

Leave a Reply