• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எல்லா அப்பாவுக்கும் பெண் குழந்தைகள் மேல் பிரியம் இருக்கும்.

சினிமா

காரணம் தன் ரத்தமே உயிராக, பெண்ணாக முன்னால்  இருப்பதாக இருக்கலாம். ஏனோ தெரியவில்லை பெண் பிள்ளைகளுக்கு அப்பாவை பிடிக்கும்.

ரஜினிகாந்த் என்கிற சூப்பர் ஸ்டாருக்கும் அப்படித்தான். அவருக்கு திருமணமாகி 1982 புதுவருடம் பிறந்தபோது ஐஸ்வர்யம் பிறந்தது. சரியாக 13 நாள் கழித்து வெளியானா போக்கிரி ராஜா சூப்பர் ஹிட்.

ஐஸ்வர்யா பிறந்ததும் பத்திரிக்கைகள் அன்றே அந்த பச்சிளங்குழந்தையை பற்றி வம்புகள் எழுதின. ரஜினிகாந்தின் முதல் குழந்தையின் பெயர் 'மண்டோதரி' எனப் பெயரிடப்பட்டதாக எழுதின. தமிழ் மட்டுமல்ல. ஆங்கில, மலையாளப்பத்திரிக்கைகளும் எழுதின. ஆனால் ரஜினியோ தன் தாய் ஜீஜாபாயின் பெயரை வைத்து அழைத்தார். பார்க்கவும் ரஜினி அம்மா சாயலில் தான் ஐஸ்வர்யா இருப்பார். பள்ளிக்கு ஐஸ்வர்யா என்கிற பெயரும். 

சிலநாள் கழித்து அதே பத்திரிக்கைகள் ரஜினி வெளியுலகத்துக்கு காட்டாமல் குழந்தைகளை வளர்த்ததால் 'ரஜினி குழந்தைகள் ஊனமுற்ற குழந்தைகள்' என எழுதின. 

ஐஸ்வர்யா வளர்ந்துவிட்டிருந்தாலும் அவை விடவில்லை. இம்முறை ஐஸ்வர்யாவின் பள்ளித்தோழன் சிம்பு எடுத்த மன்மதன் படத்தின் 'மன்மதன்' என்கிற எழுத்துக்கள் பெண்களின் பெயரால் இருக்கும். அதில் Ishwarya என்கிற பெயரை கண்டுபிடித்து 'இது ரஜினி மகள் பெயர் தான்' என எழுதின.

ஐஸ்வர்யா ஐக்கிய நாட்டு சபையின் ஒரு விழாவில் அவர் நடனமாடிய போது சோஷியல் மீடியா அவரை கரித்துக்கொட்டியது. பின் தனுஷ் உடனான திருமணம். இது குறித்தும் பல கதைகள்.

பின் தனுஷை வைத்து அவர் '3' படம் இயக்கிய போது ஸ்ருதி ஹாசனும், தனுஷும் தனியாக சந்திப்பதாகவும் ஐஸ்வர்யாவே அவர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்து விட்டதாக எழுதினார்கள். பின் தனுஷுடன் பிரிவு பற்றி எழுதியது நிறைய.

கடைசியில் ரஜினியை "சங்கி எனச்சொன்னது கேட்டால் கோபம் கோபமாக வருகிறது" எனச்சொன்னதுக்கு அடித்துக்கொண்டிருக்கிறார்கள். தன் தந்தையை பற்றி அவர் கொண்டிருக்கும் பிம்பம் அவரை அப்படி பேச வைத்திருக்கிறது.

ஐஸ்வர்யா ஆண் குழந்தையாக ரஜினிக்கு பிறந்திருந்தால் இப்படி எழுதுவார்களா?. சக நடிகரான கமலஹாசன் மகள் ஸ்ருதியைப்பற்றி எழுதுவதில்லை. சிரஞ்சீவியின் மகன் ராம் சரண், அமிதாப்பின் மகன் அபிஷேக், மம்முட்டியின் மகன் துல்கர் இப்படி பெரிய நடிகர்களின் மகன்கள் சினிமாவில் நடிக்கும் போது ஐஸ்வர்யா படம் இயக்குவது ஏன் இவர்களுக்குப்பிடிப்பதில்லை?. இத்தனைக்கும் 3 படம் போன மாதம் சென்னையில் ரிலீசாகி வசூலை குவித்திருக்கிறது. ரிலீசான புதிய கேப்டன் மில்லர் கூட அவ்வளவு வரவேற்பை பெறவில்லை.

இயக்குனராக ஐஸ்வர்யா வெற்றி பெற்றிருக்கிறார். பிரபலமானவர்களின் பெண் குழந்தைகள் மட்டும் பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் அடியோடு அடி தான். 

நம்மை பழிப்பவர்களிடம் நம் வெற்றியைக்கொண்டு தான் பழி தீர்க்க முடியும். லால் சலாமின் வெற்றி அவரை மண்டோதரி என முதன்முதலில் பொய்யாக எழுதிய அந்த நிருபரின் கைக்கு கொடுத்த முதல் அடியாக இருக்குமா?....

சோஷியல் மீடியாவுக்கு பதிலடி கொடுக்கணும்னு நினைக்காம முன்னாடி போயிட்டே இருக்கணும்....

லால் சலாம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா ரஜினி....

Selvan Anbu

Leave a Reply