• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காமெடி நடிகர் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தார், நான் கேரவனுக்கு வர சொன்னேன்.. பிரபல நடிகை பிரகதி பேட்டி 

சினிமா

இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த வீட்ல விசேஷங்க என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் பிரகதி. இவர் பெரிய மருது, பாண்டியனின் ராஜ்ஜியத்திலே, ஜெயம் போன்ற நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை பரகதி அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், ஒரு திரைப்படத்தின் ஷூட்டிங்கில், பிரபல காமெடி நடிகர் ஒருவர் என்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டார். மறைமுகமாக படுக்கைக்கு அழைத்தார்.

அந்த சமயத்தில் நான் பேசவில்லை. ஷூட்டிங் முடிந்த உடன் அவரை என்னுடைய கேரவனுக்கு அழைத்தேன். அப்போது அவரிடம், நான் எதும் அந்த மாதிரி உங்களுக்கு சிக்னல் கொடுத்தேனா? வேறு விதமாக உங்களிடம் நடந்து கொண்டேனா? என்று கேட்டேன்.

இதற்கு காமெடி நடிகர், "இல்லை" என்று பதில் அளித்தார். உடனே நான், நீங்கள் என்னிடம் நடந்து கொண்ட விதம் ரொம்ப தவறானது. ரொம்பவும் கீழ்த்தரமான செயல் என்று அந்த நடிகருடன் கூறியதாக பிரகதி பேட்டியில் பகிர்ந்து உள்ளார்.   
 

Leave a Reply