• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலகில் மழையே பெய்யாத கிராமம்

உலகிலேயே அதிக மழை பெய்யும் மேகாலயாவில் உள்ள மவ்சின்ராம் கிராமத்தைப் போல, மழையே பெய்யாத ஒரு கிராமம் இருக்கிறது.

ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் உள்ள அல்-ஹுடாய்ப் என்ற கிராமம், மழையே பெய்யாத நாடு என கூறப்படுகிறது.

மலைப்பகுதியான இந்த கிராமம் தரை மட்டத்திலிருந்து சுமார் 3,200 மீற்றர் உயரத்தில் உள்ளது.

ஒரு சிவப்பு மணற்கற்களால் ஆன மேடையில் இந்த கிராமம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த கிராமத்தில் இரண்டு பள்ளிகள், ஹதிமி மசூதி மற்றும் மன்சூர் அல் யேமன் மசூதி என இரண்டு மசூதிகள் உள்ளன.

அரபியில் கஹ்ஃப் உன்-நயீம் என்று அறியப்படும் `ஆசீர்வாத குகை’ ஹுடாய்ப் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது.

இந்த கிராமம் மேகங்களுக்கும் மேல் அமைத்துள்ளமையை குறித்த பகுதியில் மழை பெய்யாமைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே மேகங்கள் மழையை உருவாக்கும். இதன்படி, மேகங்களுக்குக் கீழே மழை பொழியும்.

மேகங்களுக்கு மேல் கிராமம் அமைந்துள்ளதால் மழையே பெய்யாத சூழல் இங்கு நிலவுகிறது.

மழை இல்லாததால் இந்த பகுதி வறட்சியுடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply