• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இரண்டு முன்னணி நடிகைகளுடன் கைகோர்க்கும் சிம்பு

சினிமா

நடிகர் சிம்புவின் 48-வது படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. தற்போது இந்த படத்திற்கு STR 48 என்று தற்காலிகமாக தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் பற்றிய தகவல் எதுவும் வெளிவராமல், அவ்வப்போது சிம்பு ஜிம்மில் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மட்டுமே வந்து கொண்டு இருந்தது. படம் குறித்து எந்த ஒரு அப்டேட் இல்லாததால் சிம்பு ரசிகர்கள் அப்செட்டில் இருந்தார்கள்.
  
சமீபத்தில் STR 48 படத்தில் சிம்பு ஹீரோ, வில்லன் என இரண்டு வேடங்களிலும் நடிப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ஹீரோ சிம்புக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாராம். வில்லன் சிம்புக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போதுவரை இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. 
 

Leave a Reply