• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தலைமுறை தாண்டி தமிழ் வளர்ப்போம்

சினிமா

திருவள்ளுவர் ஆண்டு சுறவம் 6ஆம்நாள் காரிக்கிழமை(20.01.2024 Saturday) காலை 10:30 மணி முதல் 11:30மணிவரை தமிழ் மரபுத்திங்கள் கண்காட்சி சென்.புரோரரன்சு கத்தோலிக்க பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கண்காட்சியில் சிற்பி கல்லூரி மாணவர்களின் ஆளுமைகளை வெளிப்படுத்தும் கண்காட்சியாக அமைந்துள்ளது.தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் தமிழ்ப் பண்பாட்டின் மரபுகளை இளையதலைமுறையினரின் உள்ளங்களில் பதிவேற்றும் பாரியபணியை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது..

பல்லாயிரம் ஆண்டாக தமிழ் தமிழ்ப்பண்பாடு தமிழரின் அறம் தமிழினம் என பல்வேறு கோணத்தில் நாம் அழித்துக்கொண்டிருக்கிறோம்.

பல்லாயிரம் ஆண்டு அழிவில் நடுவிலே இன்று உலக வரலாற்றில் 3000 ஆண்டுகளைத் தாண்டியும் செழிமையோடு “செம்மொழி” என்ற உயர்வோடும் பேச்சும் எழுத்தும் நிறைவோடும் புதிய தொழில்நுட்பத்திற்கு ஈடாக இன்று உலகப்பந்தில் கோலோச்சுகின்ற மொழி எம் தாய்மொழி தமிழ் மட்டுமே.

சிற்பி கல்லூரி மாணவர்கள் மழலைகள்.இவர்கள் தமிழ்மரபுத்திங்களில் தமிழ் தமிழர் தமிழர் பண்பாடு பற்றிய ஆக்கங்களைச் செய்து கண்காட்சியாக பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தி மகிழ்ச்சியில் திளைக்க வைத்தார்கள்.  

பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழுக்கு அழிவைக்கொடுத்தாலும் ஏதோ ஒருவழி தமிழ் தமிழர் என எம் இன உறவுகள் எழுச்சி கொள்ளும் காட்சி மிகச் சிறப்பாகும்.

மழலைகளின் ஆளுமையை தமிழ் மரபுத்திங்கள் நிகழ்வின் ஊடாக வெளிப்படுத்தி தமிழ் அடுத்த தலைமுறையைத்தாண்டும் என்பதை சிற்பி கல்லூரியினர் தமிழ் மரபுத்திங்கள் நிகழ்வில் வெளிப்படுத்தியிருந்தார்கள்.இவ்விழாவை ஒழுங்கமைத்து சிறப்பாக நடாத்திய கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் பலகோடி நன்றிகள்
 

Leave a Reply