• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளிநொச்சியை சூறையாடும் மணல் மாபியாக்கள்

இலங்கை

கிளிநொச்சி, பரந்தன்- முல்லைத்தீவு பிரதான வீதியை அண்மித்த பகுதிகளில் மணல் மாபியாக்களால் சட்டவிரோத மண்அகழ்வுச் செயற்பாடுகள் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் குறித்த பகுதியானது, இரணைமடு குளத்தின் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியை மிக அண்மித்து காணப்படுவதால், எதிர்காலத்தில் மிகப் பெரிய அனர்த்தங்களையும், பாதிப்புக்களையும் ஏற்படுத்தும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில் அவர்  10 நாட்களுக்குள் இப் பிரச்சனைக்கு  நிரந்தர தீர்வைப் பெற்றுத் தருவதாகக் கூறியதுடன்,  இதுதொடர்பாக  3 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை அழைத்து விசேட கலந்துரையாடலொன்றையும் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த பகுதிக்கு நேற்று (31) பிற்பகல் சென்ற கண்டாவளை பிரதேச செயலாளர், கள நிலைமைகளை கண்காணித்ததுடன்,சட்டவிரோத  மணல் அகழ்வை  கட்டுப்படுத்தும் நடவடிக்கையை கிராம மட்ட அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் பொலிஸார் முன்னெடுக்கவுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply