• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புகையிரத – கடவுச்சீட்டுக் கட்டணங்களில் மாற்றம்

இலங்கை

புகையிரதங்களில் பொதிகளை அனுப்புவதற்கான கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சாதாரண கடவுச்சீட்டு சேவைகளுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கப்படும் எனவும் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

புகையிரதங்களில் பொதிகளை அனுப்புவதற்கான கட்டணம் இன்று முதல் 50 ரூபாயாக அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், குறைந்தபட்ச கட்டணம் 150 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, யால மற்றும் பூன்ந்தல சரணாலயங்களில் சுற்றுலாவுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள ஜீப் ரக வாகனங்களுக்கான கட்டணமும் இன்று முதல் 2,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 4 மணித்தியாலங்கள் சுற்றுலாவில் ஈடுபடும் வாகனங்களுக்காக 15,000 ரூபாய் அறவிடப்படவுள்ளதுடன், நாள் ஒன்றுக்கான கட்டணமாக 30,000 ரூபாய் அறவிடப்படவுள்ளதாக சபாரி (safari) ஜீப் ரக வாகன சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சாதாரண கடவுச்சீட்டு சேவைகளுக்கான கட்டணங்களும் நாளை முதல் அதிகரிக்கப்படும் என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், கடவுச்சீட்டு விண்ணப்பங்களுக்கான கட்டணம் 5,000 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 10,000 ரூபாயாக அறவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply