• Welcome to TamilsGuide
செய்திகள் 1

70 களில் புல்லட் பைக் ஒட்டி அசத்திய கேஆர் விஜயா.. யாரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்.!

சினிமா

பிரபல நடிகை கேஆர் விஜய குறித்த சுவாரசிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. 70 களில் மாஸ் காட்டிய கேஆர் விஜயா பற்றிய அந்த தகவல் குறித்து இங்கே பார்ப்போம்.                                   

தமிழ் சினிமாவில் 1960,70 களில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை கே.ஆர். கேஆர் விஜயா   எம் ஜி ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெயஷங்கர் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார் கே. ஆர் விஜயா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடா மொழிகளிலும் தனது அசாத்திய நடிப்பால் சிறந்த நடிகையாக வலம் வந்தவர் கேஆர் விஜயா.    

புன்னகை அரசி என்றழைக்கப்பட்ட கேஆர் விஜயா சென்னையில் வசித்து வந்த கேரளா குடும்பத்தை சேர்ந்தவர். தந்தையின் விருப்பத்திற்காக நடிப்பில் களமிறங்கிய கேஆர் விஜயா, 1963ல் வெளியான 'கற்பகம்' படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார்.                                            

குறுகிய காலகட்டத்தில் முன்னணி டாப் நடிகையாக வலம் வந்த நடிகை கேஆர் விஜயா, தென்னிந்தியா மொழிகளில் 500 கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் ஆண்டிற்கு குறைந்தபட்சம்  10 படங்களாவது திரையரங்குகளில் வெளியாகுமாம்.  கவர்ச்சி, குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை கதைக்கு ஏற்ப தேர்ந்தெடுத்துது நடித்து வந்த கேஆர் விஜயா சினிமாவின் உச்சத்தில் இருந்தபோது 1966 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.                        

அதன் பின் நடிப்புக்கு முழுக்குபோட்ட நடிகை கேஆர் விஜய மீண்டும் கணவரின் அனுமதியுடன் மீண்டும் நடிக்க தொடங்கிய அவர் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.  60 ஆண்டுகளும் மேலாக இன்றுவரை திரைப்படங்களில் நடித்து வரும் கேஆர் விஜயா பற்றி யாரும் அறியாத ஒரு செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.                                                                  

தற்போது பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ராயல் என்பீல்டு பைக்கை, 70 களிலேயே ஒட்டி அசத்தியவராம் நடிகை கேஆர் விஜயா. 

தமிழ் சினிமாவில் இன்றைக்கும் கேஆர் விஜயாவுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமுண்டு.

Rj Nila

Leave a Reply