• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சாரதிப் பாடசாலைளின் தரம் குறித்து விசேட நடவடிக்கை

இலங்கை

சாரதி பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான வழிமுறைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர் சுஜித் தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மருத்துவ சங்கத்தினால் வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பாக நேற்று (30) இலங்கை மருத்துவ சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு முன்னர், சாரதி பாடசாலைகளில் ஆரம்ப பயிற்சி மற்றும் எழுத்துத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இலங்கை மருத்துவ சங்கத்தின் வீதி விபத்து தடுப்பு குழுவின் தூதுவர் டிலந்த மாலகமுவ, கடந்த வருடத்தை விட இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நெடுஞ்சாலைகளில் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் மாத்திரம் வீதி விபத்துகளினால் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வாகன விபத்துக்களை தடுப்பதற்கு முறையான வேலைத்திட்டம் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

Leave a Reply