• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வவுனியாவில் வயல் விழா நிகழ்வு முன்னெடுப்பு

இலங்கை

வவுனியா, முருகனூர் விவசாய பண்ணையில் வயல் விழா இன்றையதினம் இடம்பெற்றது.குறித்த நிகழ்வானது வவுனியா மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது நெற்செய்கை தொடர்பான புதிய தொழில்நுட்ப முறைகள்,பாரம்பரிய முறைகள், நோய்த்தாக்கங்கள் அவற்றினை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், புதிய நடுகை முறைகள் என பல்வேறு விடயங்களை விவசாய போதனாசிரியர்களினாலும், பிரதி விவசாய பணிப்பாளரினாலும் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலைய மேலதிக விவசாய பணிப்பாளர் ந. சிவநேசன், பிரதி விவசாய பணிப்பாளர் அற்புதச்சந்திரன் மற்றும் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், விவசாயிகள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 

Leave a Reply