• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சபாநாயகரிடம் சிவில் சமூக அமைப்புகள் விஷேட கோரிக்கை

இலங்கை

”இணையவழி பாதுகாப்புச் சட்டமூலதிற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முன்னர் அது உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளை பின்பற்றியதா? என்பதை உறுதி செய்யுமாறு”ஊடகங்களும் சிவில் சமூக அமைப்புகளும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

நாடாளுமன்றத்தில் 24 ஆம் திகதி அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, ஊடகங்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ‘அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக எழுச்சி பெறுவதற்கான தொழிற்சங்கக் கூட்டமைப்பு‘ ஆகியவை இணைந்து சபாநாயகர் மஹிந்த யப்பாவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது” கருத்துச் சுதந்திரத்திற்கு முற்றிலும் ஆபத்தை ஏற்படுத்தும் குறித்த இணையவழி பாதுகாப்புச் சட்டமூலத்தை நிராகரிக்க வேண்டும். குறித்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 45 அடிப்படை உரிமை மனுக்களின் பதிவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு உயர் நீதிமன்றம் திருத்தங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கிய போதும் அதனை இணைத்துக்கொள்ளாமல் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டாலும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை முடக்கும் விதிமுறைகளுக்கு எதிரான போராட்டத்தை தாம் நிறுத்தப் போவதில்லை.

மேலும் எதிர்வரும் தேர்தலில் தமக்கு எதிரான எதிர்ப்பை எதிர்கொள்ளவே இணையவழி பாதுகாப்புச் சட்டமூலத்தை அவசரமாக, சட்டமாக்க அரசாங்கம் முயற்சிக்கின்ற நிலையில் நீதிமன்றின் யோசனைகளை இணைக்காமல் அதற்கு சான்றளிக்க வேண்டும் ” என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a Reply