• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சமூகத்தில் உரையாடல் தொடங்கும்வரை தவறை உணரவே முடியாது- ரன்பீர் கபூர்

சினிமா

பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'அனிமல்'. இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

இப்படம் ஒரு தரப்பில் பாராட்டை பெற்றாலும் பலர் இதற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதிலும், படத்தில் இடம்பெற்றுள்ள ஆணாதிக்கம் மற்றும் இந்துத்துவத்தை தாங்கி பிடிக்கும் காட்சிகள் குறித்து நெட்டிசன்கள் பலர் சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமூகத்தில் உரையாடல் தொடங்கும் வரை நம்மால் அந்த தவறை உணரவே முடியாது என்று ரன்பீர் கபூர் கூறியுள்ளார். நேர்காணலில் கலந்து கொண்ட ரன்பீர்கபூர், "சமூகத்தில் நிலவும் நச்சுத்தன்மை கொண்ட ஆணாதிக்கம் குறித்து 'அனிமல்' படம் ஓர் ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுத்துள்ளது. இது மிகவும் நல்ல விஷயம். சினிமா என்பது குறைந்தபட்சம் ஒரு உரையாடலை ஏற்படுத்த வேண்டும். ஏதேனும் தவறு நடக்கும்போது, அது தவறு என்று நாம் காட்டாவிட்டால், சமூகத்தில் உரையாடல் தொடங்கும்வரை நம்மால் அந்த தவறை உணரவே முடியாது" என்று கூறினார்.
 

Leave a Reply