• Welcome to TamilsGuide
செய்திகள் 1

-சீதை - ராமன் திருமணம்... நடத்தி வைத்த 3 பேர் - ராமாயணத்தை பாட்டில் வைத்த கண்ணதாசன்

சினிமா

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கவியரசர் கண்ணாசன் எழுதிய இந்த வரிகளை தனது இனியான குரலில் பி.சுசிலா பாடியிருந்தார்.

3 பேர் சேர்ந்து ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கும் போது வரும் பாடலை ராமாயணத்துடன் ஒப்பிட்டு சீதை – ராமன் திருமணம் அதை திருமாள், பிரம்மா, சிவன் ஆகிய மூவரும் திருமணம் செய்து வைப்பது போல் பாடலை அமைத்திருப்பார்.

1971-ம் ஆண்டு தமிழில் வெளியான படம் 3 தெய்வங்கள். தாதா மிராசி இயக்கிய இந்த படத்திற்கு சித்ராலயா கோபு திரைக்கதை அமைத்திருந்தார். இந்தி படத்தின் தழுவலாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் சிவாஜி கணேசன், முத்துராமன், நாகேஷ், சிவக்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். எம்.ஸ்.விஸ்வநாதன் இசையமைக்க இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

சிறையில் இருந்து தப்பிக்கும் 3 பேர் ஒரு வீட்டுக்கு திருட செல்லும்போது, அந்த வீட்டில் உள்ளவர்களின் நல்ல குணங்களை பார்த்து இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்போது அந்த வீட்டில் திருமணம் ஆகாமல் இருக்கும் ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு, நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே போய்விடலாம் என்று நினைக்கிறார்கள்.

அந்த பெண்ணுக்கு இவர்கள் மூவரும் திருமணம் செய்து வைப்பது போல் கனவு காண்கிறார்கள். அப்போது வரும் பாடல்தான் ‘’வசந்தத்தில் ஓர் நாள்’’ என்ற பாடல். இந்த பாடலில் திருமணம் பூலோகத்தில் நடந்தாலும், பாடலை எழுதிய கண்ணதாசன், ராமன் – சீதைக்கு திருமணம், இதை திருமால், பிரம்மா, சிவன் ஆகியோர் நடத்தி வைப்பது போல் பாடல் வரிகளை அமைத்திருப்பார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கவியரசர் கண்ணாசன் எழுதிய இந்த வரிகளை தனது இனியான குரலில் பி.சுசிலா பாடியிருந்தார். இந்த பாடல் இன்று ஒரு வெற்றி பாடலாக நிலைத்திருக்கிறது. இந்த பாடலில் ஒவ்வொரு வரியிலும் வரும் கடைசி வார்த்தையான தேவி என்ற வார்த்தையை ஒவ்வொரு மாடலேஷனில் பாடி அசத்தியிருப்பார். இதுவே இந்த பாடலின் தனித்துவமாக இருக்கிறது.
 

Leave a Reply