• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திரிசூலம் வசூல் சாதனை

சினிமா

இன்று ஜனவரி 27 ல் , 1979ல் வெளியான திரிசூலம் படத்தின் சிறப்புக்கள்  குடியரசு தின விழா  சிறப்புப் படமாக வெளிவந்தது ,1973 இல் வெளியான எம்ஜி ராமச்சந்திரனின் உலகம் சுற்றும் வாலிபன் இன்டஸ்ட்ரி ஹிட்டானது. அதன் வசூலை ஐந்து வருடங்கள் எந்தப் படத்தாலும் முறியடிக்க முடியவில்லை. 1979 இல் வெளியான சிவாஜியின் திரிசூலம் படம் உலகம் சுற்றும் வாலிபனின் வசூலை முறியடித்து, புதிய இன்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமானது. 

திரிசூலம் வசூல் சாதனைகளை தொகுத்து தந்தி டிவிக்கு கொடுக்க வேண்டும், பின்னர் தான் தந்தி டிவியில் பங்கு பெரும் நெறியாளர்களாகட்டும் அதன் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளில் கருத்தை பதிவு செய்யும் பார்வையாளர்களாகட்டும் அவர்களுக்கு உண்மையான வெற்றி, வசூல் சாதனை என்றால் என்ன என்பதை புரிய வைக்க முடியும்,

... திரிசூலம் 1979 ல் ரிலீஸான போது சென்னை சாந்தியில் மட்டுமே 272 காட்சிகள் அட்வான்ஸ் புக்கிங் முறையே முன் பதிவிட்டவர்களுக்கு அதிர்ஸ்டம் அடித்தது அதாவது ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு டிக்கெட் இல்லை,

இப்போது உள்ளது போல 100 இருக்கைகளை கொண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் போன்ற ஹவுஸ்புல்  காட்சிகள் இல்லை 1200 இருக்கைகளை கொண்டிருந்த திரையரங்குகளில் சாதனையை நிகழ்த்திய காவியம் திரிசூலம்

சென்னை சாந்தி திரையரங்கில் மட்டுமே 175 நாட்கள் ஓடி அன்றைய மதிப்பில் ரூபாய் 16,85,000 வசூலித்து சாதனை படைத்தது,

அதாவது 8 லட்சம் பார்வையாளர்கள் வரை ஒரு திரையரங்கில் மட்டுமே கண்டு மகிழ்ந்த அபூர்வம்,

இப்போது வெளியாகும் பிரபலமான ஹீரோக்களான அஜித் மற்றும் விஜய் போன்றோரின் திரைப்படங்களை எட்டு லட்சம் பார்வையாளர்கள் கண்டுகளிக்க வேண்டுமெனில் அவர்களின் திரைப்படம் குறைந்த பட்சம் 2000 திரையரங்குகளில் வெளியாக வேண்டும்,

இந்த ஒப்பீடு தலையை சுற்ற வைக்கிறது ஏறக்குறைய திரிசூலம் ஒரு திரையரங்கில் மட்டுமே 100 கோடியைக் குவித்து இருக்கிறது.

நடிகர் திலகம் ஒருவரே ரியல் வசூல் சக்கரவர்த்தி!!

வி.ராம்ஜி

1979-ம் ஆண்டு, ஜனவரி 27-ல் வெளியானது ‘திரிசூலம்’. கமல், ரஜினி, விஜயகுமார், சிவகுமார், ஜெய்கணேஷ், ஸ்ரீகாந்த் என்று இளமை ததும்ப நடிகர்கள் வந்துவிட்டிருந்த நிலையிலும், சிவாஜி வெள்ளிவிழாப் படமாக இந்தப் படத்தைக் கொடுத்து சாதனை படைத்தார்.சிவாஜியின் 200 வது படமாக 1979, ஜனவரி 27 வெளியான திரிசூலம், முந்தைய சாதனைகளை முதல்நாளிலிருந்தே உடைக்க ஆரம்பித்தது. சென்னையில் 900 அரங்கு நிறைந்த காட்சிகள், மதுரையில் 400 க்கு மேல் அரங்கு நிறைந்த காட்சிகள், 50 திரையரங்குகளுக்கு மேல் 175 அரங்கு நிறைந்த காட்சிகள் என்று சாதனைகள் படைத்தது. சென்னை சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி, மதுரை சிந்தாமணி, கோவை கீதாலயா, திருச்சி பிரபாத், தஞ்சை அருள், சேலம் ஓரியண்டல், வேலூர் அப்சரா, பாண்டிச்சேரி ஜெயராமன் என 11 திரையரங்குகளில் 175 நாள்கள் ஓடி வெள்ளிவிழா கண்ட முதல் படம் என்ற இன்னொரு சாதனையையும் படைத்தது. இதில் வேலூரில் ஒரு படம் வெள்ளிவிழா காண்பது அதுவே முதல்முறை. அதுபோல் திருப்பூரில் 100 நாள் ஓடிய முதல் படமும் இதுவே.

அன்று பிலிம்ரோல்கள் அதிக விலை என்பதால் பெரிய படங்களுக்கும் ஐம்பதுக்குள்தான் பிரிண்ட்கள் போடப்படும். இதனால் படங்கள் ‘ஏ’ சென்டர்களில் வெளியாகி ஓடி முடித்த பின், ‘பி’ சென்டர்கள், அடுத்து ‘சி’ சென்டர் என வெளியாகும். திரிசூலம் படம் ‘ஏ’ சென்டர்களில் எத்தனை அமோக கூட்டத்துடன் ஓடியதோ, அதே கூட்டத்துடன் பி, சி சென்டர்களில் அடுத்தடுத்து வெளியான போதும் ஓடியது. அன்றைய காலகட்டத்தில் 3 கோடிகளைத் தாண்டி வசூலித்து, 3 கோடி வசூலித்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையையும் பெற்றது.

27-01-1979 வெளியான திரிசூலம் தனது 45 வது வருடத்தை நிறைவு செய்கிறது.

மூன்று வேடங்களில் சிவாஜி நடித்த ‘தெய்வ மகன்’ படம் பார்த்துவிட்டு, ‘’மூன்று சிவாஜியும் மூன்று பேரா?’’ என்று கேட்டு அசந்துபோனார்கள் வெளிநாட்டுக்காரர்கள். ஒவ்வொரு வேடத்துக்கும், ஒவ்வொரு படத்துக்கும் அத்தனை மெனக்கிடல்களுடன் அர்ப்பணிப்பைக் கொடுத்து நடிக்கும் நடிகர்திலகம் 200-வது படமான திரிசூலத்திலும் மூன்று வேடங்களில் அசத்தினார். அந்தப் படத்தின் வெற்றியானது அதுவரையிலான கலெக்‌ஷன் சாதனைகளை முறியடித்தது.

இந்தப் படம், சென்னையில் 900 ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது. மதுரையில் 375 ஹவுஸ்ஃபுல் காட்சிகளைக் கடந்து ஓடியது. திருச்சி பிரபாத்திலும் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்தது. ஒன்பது தியேட்டர்களுக்கு மேல் வெள்ளி விழா கடந்து ஓடியது. இலங்கையிலும் ‘திரிசூலம்’ மும்மடங்கு வெற்றியைக் கொடுத்தது.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கவியரசு கண்ணதாசன் பாடல்களை எழுதினார். ‘மலர்கொடுத்தேன் கைகுலுங்க வளையலிட்டேன்’ என்ற பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. டெலிபோனில், டிரங்கால் புக் செய்யப்பட்டு, ‘கால்’ வந்திருக்கும். எதிரெதிர் முனையில் சிவாஜியும் கே.ஆர்.விஜயாவும். நீண்ட வருடங்கள் கழித்து போனில் பேசிக்கொள்வார்கள். உருகுவார்கள். மகிழ்வார்கள். நெகிழ்வார்கள். ஆனந்தத்தில் அழுவார்கள். சிரிப்பார்கள்.

அப்போது சிவாஜி, கே.ஆர்.விஜயாவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, திடீரென அவசரமாக ‘எக்ஸ்டென்ஷன் ப்ளீஸ்’ என்று கத்துவார் சிவாஜி. அந்தக் காலத்தில், டிரங்கால் புக் செய்து பேசியவர்களுக்கு இது தெரியும். நடுவே டெலிபோன் டிபார்ட்மென்ட்காரர்கள் புகுந்து, ‘’என்ன... கால் கட் செய்யலாமா... நீட்டிக்க வேண்டுமா?’’ என்று கேட்பார்கள். இதையெல்லாம் உணர்ந்து சிவாஜி நடிப்பில் அட்டகாசம் பண்ணியிருப்பார்.

1979-ம் ஆண்டு, ஜனவரி 27-ல் வெளியானது ‘திரிசூலம்’. கமல், ரஜினி, விஜயகுமார், சிவகுமார், ஜெய்கணேஷ், ஸ்ரீகாந்த் என்று இளமை ததும்ப நடிகர்கள் வந்துவிட்டிருந்த நிலையிலும், சிவாஜி வெள்ளிவிழாப் படமாக இந்தப் படத்தைக் கொடுத்து சாதனை படைத்தார். படம் வெளியாகி, 45 ஆண்டுகளாகியும், இன்னும் ‘மலர்கொடுத்தேன் கைகுலுங்க வளையலிட்டேன்’ பாடல், நம் செவிகளுக்கும் மனதுக்கும் இதம் சேர்க்கிறது!
 

Leave a Reply