• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திரும்பி பார் சிவாஜி பற்றி எம்.ஜி.ஆர்..!

சினிமா

1962ல், நடிகர் திலகம் கலைத் தூதராக அழைக்கப்பட்டு அமெரிக்க அரசால் கௌரவப்படுத்தப்பட்டார். இதற்காக, சிவாஜி அமெரிக்கா சென்று திரும்பிய போது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் அவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலே எம்.ஜி.ஆர். சிவாஜி பற்றிச் சொன்னது அவ் விழாவில்தான். அப்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் எம்.ஜி.ஆர்.தான். அவ்விழாவில் எம்.ஜி.ஆர். சிவாஜி பற்றிச் சொன்னது..

"நல்ல குணங்களுள்ள பாத்திரங்களில் நடித்து, மக்கள் மனதில் இடம் பெறுவது எளிது என்று கூறலாம். பாத்திரம் மக்கள் மனதில் பதியுமானால் அதனை ஏற்கும் நடிகரும் இடம் பெறுவது இயற்கை. ஆனால் மக்களால் வெறுக்கப்படும் பாத்திரங்களைத் தாங்கி, மக்கள் மனதில் இடம் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல என்பதை நாம் அறிய வேண்டும். ‘திரும்பிப் பார்’ என்ற படத்தில் முழுக்க முழுக்க வில்லன் பாகத்தையே ஏற்றார் சிவாஜி. பல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்குமளவுக்கு, ‘ஆங்கில பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ் பெற்றார் அவர். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், ‘ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்த பாத்திரங்களைப் போலவே அவர் நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படம் எடுத்த போது) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புத மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும் தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்!" 

Leave a Reply