• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சஸ்பென்ஸ் திரில்லர் கதையை புதிய கோணத்தில் சொல்லும் அதோமுகம்

சினிமா

அறிமுக இயக்குனர் சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'அதோமுகம்'. இந்த படத்தில் கதையின் நாயகனாக சித்தார்த் எஸ். பி. கதையின் நாயகி சைத்தன்யா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் அனந்த் நாக், சரித்திரன், நக்லைட்ஸ் கவி, வர்கீஸ், பிபின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் அருண்பாண்டியன் நடித்திருக்கிறார்.

சரண் ராகவன் பின்னணி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு அருண் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷ்ணு விஜயன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தை இதுவரை பட விநியோக வியாபாரத்தில் இருந்து வந்த ரீல் பெட்டி நிறுவனம் தரிகோ பிலிம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

ஊட்டி, குன்னூர் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் கதைகளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். மலைகள், குளிர், மிஸ்ட் ஆகியவையுடன் டெக்னாலஜியுடன் கூடிய சஸ்பென்ஸ் திரில்லாராக படம் உருவாகியுள்ளது. கதாநாயகன் தனது மனைவி மொபைல் போனில் அவருக்கு தெரியாமல் ஒரு ஸ்பை அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ததால் அவனது வாழ்க்கை தலைகீழாக மாறுவது தான் கதை. இதை சுற்றி பல திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையை வடிவமைத்து 'அதோமுகம்' படத்தை உருவாக்கியுள்ளார்கள்.
 

Leave a Reply