• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காக்கா- கழுகு கதைக்கு முற்றுபுள்ளி வைத்தார் நடிகர் ரஜினி - லால் சலாம் படவிழாவில் பேச்சு

சினிமா

லால் சலாம் பட இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில கலந்து கொண்ட ரஜினி காந்த் பேசியதாவது:-

விஜய் என் கண்ணுக்கு முன்னால வளர்ந்த பையன். தர்மத்தின் தலைவன் சூட்டிங்போது விஜய்க்கு 13, 14 வயசு இருக்கும். சூட்டிங்கை பார்த்துக் கொண்டிருந்தார். சூட் முடிஞ்சதும் சந்திரசேகர் அறிமுகப்படுத்தினார்.

"என் பையன். நடிப்புல ரொம்ப ஆர்வம் இருக்கு. படித்த முடித்த பிறகு நடிக்கலாம் என நீங்க சொல்லுங்க" எனத் தெரிவித்தார். நான் விஜயிடம் "நல்லா படிப்பா. அதன்பின் நடிகர் ஆகலாம் என்று சொன்னேன்.

அதன்பின் விஜய் நடிகராகி, படிப்படியாக அவருடைய டிசிப்ளின், திறமை, உழைப்பால் தற்போது இந்த உயர்வான இடத்துல இருக்கிறார். சமூக சேவை செய்து வருகிறார். அடுத்து அரசியல்... இதுல எனக்கும் விஜய்க்கும் போட்டி என சொல்வது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கிறது.

தயவு செய்து ரெண்டு பேரின் ரசிகர்களும் எங்களை ஒப்பிட வேண்டாம். ஒப்பிடுவதை நிறுத்துங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள்.

நான் கூறிய காக்கா- கழுகு கதை விஜயை விமர்சித்து கூறியதாக பலர் தவறாக புரிந்து கொண்டனர். விஜயை விமர்சித்ததாக சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது வருத்தம் ஏற்படுத்தியது.

விஜய் படிப்படியாக வளர்ந்து பெரிய நடிகராக உயர்ந்திருக்கிறார். விஜய்க்கும் எனக்கும் போட்டியில்லை. எனக்கு நானே போட்டி. விஜய்க்கும் எனக்கும் போட்டி என கூறுகின்றனர். எனக்கு என் படங்களே போட்டி. அவருக்கு அவரே போட்டி. விஜயை போட்டியாக நினைப்பதோ, என்னை அவர் போட்டியாக நினைப்பதோ இருவருக்கும் கவுரவம் ஆகாது.

என்றும் நான் விஜயின் நலம் விரும்பியாக இருப்பேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

Leave a Reply