• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எனக்காக ஷூட்டிங்கை நிறுத்திய எம்.ஜி.ஆர்... -  எஸ்.பி.பி கூறிய உண்மை சம்பவம்

சினிமா

அடிமைப்பெண் திரைப்படம் எம்.ஜி.ஆர்-ரின் திரை வாழ்க்கையில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இந்திய திரையுலகின் முன்னணி பாடகர்களில் ஒருவராக திகழ்ந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அடிமைப்பெண் படத்தில் தனக்கு எம்.ஜி.ஆர் வாய்ப்பு கொடுத்தது பற்றி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

தெலுங்கு படங்களில் பாடிக்கொண்டிருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியன், 1969-ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆர்-ரின் அடிமைப்பெண் படத்தில் இடம்பெற்ற ஆயிரம் நிலவே வா என்ற பாடல் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படம் எம்.ஜி.ஆர்-ரின் திரை வாழ்க்கையில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் கே.வி.மகாதேவன் இசையில் பாடல்கள் அனைத்தும் வெற்றிப்பெற்றது.

இந்த பாடல் வாய்ப்பு கிடைத்து குறித்து பேசியுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியன் ஒரு ஸ்டூடியாவில் தமிழ் பாடலை நான் தெலுங்கில் டப்பிங்கிங்கிற்காக பாடிக்கொண்டிருக்தேன். அதை கேட்ட எம்.ஜி.ஆர் இது நம்ம படத்தின் பாடலா இருக்கே யாருனு பார்த்துட்டு வா என்று ஒருவரை அனுப்பி பார்த்துவிட்டு வரச்சொன்னார். அவரும் பார்த்துவிட்டு தெலுங்கில் டப்பிங் நடக்கிறது என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

அதன்பிறகு சில நாட்கள் கழித்து எம்.ஜி.ஆர், அடிமைப்பெண் படத்திற்காக இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனிடம் ஒரு பையன் குரல் கேட்டேன் ரொம்ப நல்லா இருந்துச்சு என் படம் அனைத்திலும் அவருக்கு ஒரு பாடல் கொடுங்கள். முடிந்தால் கொடுங்கள் இல்லை என்றால் விடுங்கள். நாங்கள் உங்களை வற்புறுத்தவில்லை என்று கூறியுள்ளார். அதன்பிறகு எனக்கு அழைப்பு வந்தது.

ராமாவரம் தோட்டத்திற்கு போனபோது அங்கே ரிசகர்சல் நடந்துகொண்டிருந்தது நானும் சுசிலா அம்மாவும் கலந்துகொண்டு ரிகர்சல் செய்துகொண்டிருந்தோம். 4 நாட்கள் முடிந்து ரிக்கார்டிங் நடக்கும் முன் எனக்கு டைபாய்டு காய்ச்சல் வந்து படுத்த படுக்கையாக ஆகிவிட்டேன். அப்போது பட தயாரிப்பாளர் வந்து எம்.ஜி.ஆர் பாடலை பாட அனைவரும் தவம் இருக்கிறார்கள். ஆனால் உனக்கு வாய்ப்பு கிடைத்தும் இப்படி ஆகிவிட்டதே என்று சொன்னார்.

நானும் என் தலைவிதி அவ்வளவு தான் என்று நினைத்துக்கொண்டு விட்டுவிட்டேன். அடுத்து 10 நாட்கள் கழித்து எம்.ஜி.ஆர் நான் எப்படி இருக்கிறேன் என்று பார்த்து விட்டு வருமாறு வருபவரை அனுப்பினார். அவர் வந்து எப்படி இருக்கிறாய் என்று கேட்டபோது நல்லாருக்கேன் இன்னும் 5 நாட்களில் ரெக்கார்டிங் வைத்தால் பாடுவேன் என்று சொன்னேன். அதேபோல் 5 நாட்கள் கழித்து ரெக்கார்டிங் வைத்தார்கள்.

நான் பாட வேண்டிய பாடலை வேறு யாராவது பாடியிருப்பார். போனா போகுது என்று நமக்கு ஒரு பாட்டு கொடுத்திருப்பார்கள் என்று நானும் போனேன். ஆனால் ஆயிரம் நிலவே வா என்ற பாடலை தான் எனக்கு கொடுத்தார்கள். எனக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் ஷூட்டிங்கையே தள்ளி வைத்துள்ளார் எம்.ஜி.ஆர். அதன்பிறகு அந்த பாடலை பாடி முடித்தேன்.

ஆனாலும் எனக்கு மனது கேட்காமல் எம்.ஜி.ஆரிடம் கேட்டேன். எனக்காக ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டபோது, நீ எஞ்சினியரிங் படிக்கிற. ரிகர்சல் முடிச்சிட்டு உன் நண்பர்கள் எல்லோரிடமும் எம்.ஜி.ஆர் படத்தில் பாடப்போவதாக சொல்லியிருப்பாய். ஆனால் எனக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் இந்த பாட்டை வேறு யாராவது பாடியிருந்தால் பாலு பொய் சொல்லியிருக்கான் என்று உன் நண்பர்கள் தப்பா நினைத்திருப்பார்கள் அதனால் தான் வெயிட் பண்ணேன் என்று சொன்னார் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
 

Leave a Reply