• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புன்னகை மன்னன் லிப்லாக் காட்சி: ரேகாவுக்கே தெரியாமல் கதையை முடித்த கமல்ஹாசன்- பாலச்சந்தர்

சினிமா

1986-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கமல்ஹாசன் ரேகாவுக்கு முத்தமிடும் காட்சி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும் நடிகர் கமல்ஹாசனின் ஆரம்ப கால படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் இயக்குனர் கே.பாலச்சந்தர். இருவருக்கும் இடையே குரு சிஷ்யன் என்பது போல் ஒரு நெருக்கம் உள்ளது என்பது திரையுலகில் பலரும் அறிந்த உண்மை. அதேபோல் இவர்கள் கூட்டணியில் வெளியான பால படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இளைஞர்கள் மத்தியிலும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க ஒரு படம் புன்னகை மன்னன். கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்த இந்த படத்தில், ரேகா, ரேவதி ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். 1986-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கமல்ஹாசன் ரேகாவுக்கு முத்தமிடும் காட்சி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், முத்த நாயகன் என்ற பட்டத்தையும் இந்த படத்தின் மூலம் பெற்றவர் கமல்ஹாசன்.

இந்த படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் என்ன சத்தம் இந்த நேரம் பாடலில் கமல் ரேகா இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து பாடிக்கொண்டிருப்பார்கள். அப்போது இந்த பாடலில் ஏதாவது தனித்துவம் வேண்டும் என்று இயக்குனர் கே.பாலச்சந்தர் கேட்க,  என்ன பண்ணலாம் என்று இருவரும் யோசித்துள்ளனர். அப்போது பாலச்சந்தர் ஒரு ஐடியா கொடுத்துள்ளார்.

இந்த பாடல் முடிந்தவுடன் கமல் ரேகா இருவரும் அருவியில் குதித்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும். அந்த காட்சியில் பேசும்போது ரேகாவை கண்களை மூட வேண்டும் என்று சொல்லி விடுகிறேன். அவர் கண்களை மூடியதும் ரேகாவின் உதட்டில் முத்தம் கொடுத்துவிடு என்று கமல்ஹாசனுக்கு ஐடியா கொடுத்துள்ளார் பாலச்சந்தர். ஆனால் ரேகா அப்போது புதுமுக நடிகை என்பதால் கமல்ஹாசன் பயந்துள்ளார்.

ஆனால் கே.பாலச்சந்ர் எல்லாம் 30 வினாடிகளில் முடிந்துவிடும் சீன் எடுத்து முடிந்தவுடன் நான் ரேகாவிடம் பேசிக்கொள்கிறேன் என்று கூறியதை தொடர்ந்து கமல் ரேகாவுக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத ரேகா என்ன நடந்தது என்று தெரியாமல் விழிக்க அதன்பிறகு கே.பாலச்சந்தர் ரேகாவுக்கு விஷயத்தை சொல்லி சமாதானம் செய்துள்ளார். இது குறித்து கமல் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply