• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரபல நடிகைக்காக பரிந்து பேசிய பாலச்சந்தர் - குருவையே கட் செய்த விசு

சினிமா

விசு இயக்கிய பல படங்களில் கேரக்டர் நடிகராகவும், சிதம்பர ரகசியம் படத்தில் படத்தில் மெயின் வில்லனாகவும் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் டெல்லி கணேஷ்.

நடிகைக்கு பரிந்து பேசியதால் தனது குருநாதரான பாலச்சந்தரையே தள்ளி வைத்தவர் இயக்குனர் விசு என்று நடிகர் டெல்லி கணேஷ் மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர் விசு. குடும்பங்கள் கொண்டாடும் படங்களை இயக்குவதில் வல்லவரான இவர், சம்சாரம் அது மின்சாரம், குடும்பம் ஒரு கதம்பம், கண்மணி பூங்கா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் தனது குருநாதரான கே. பாலச்சந்தரின் பல படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

மேலும் பல படங்களில் தனது நடிப்பின் மூலமும், கூர்மையான வசனங்கள் மூலமும் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற விசு இயக்கிய பல படங்களில் கேரக்டர் நடிகராகவும், சிதம்பர ரகசியம் படத்தில் படத்தில் மெயின் வில்லனாகவும் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் டெல்லி கணேஷ். தற்போது படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இவர், நடிகர் விசுவுடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

விசுவின் டௌரி கல்யாண வைபோகமே என்ற நாடகத்தில் தான் நான் முதன் முதலில் அறிமுகமானேன். அந்த நாடகத்தில் நான் அறிமுக நடிகராக இருந்தும் நான் சொன்ன விஷயங்களை ஏற்றுக்கொண்டு கதையில் மாற்றங்கள் செய்தார். அந்த நாடகத்தின் மூலம் எனக்கு நாகேஷ் உள்ளிட்ட பலரிடம் இருந்து பாராட்டுக்கள் கிடைத்தது. இதன் பிறகு தான் பட்டின பிரவேசம் நாடகத்தில் நடித்தேன். விசு தான் எனக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தார்.

ஆனால் விசு மிகவும் கோபக்காரர். கோபம் வந்துவிட்டால் யார் என்ன என்றே பார்க்க மாட்டார். அது டெல்லி கணேஷாக இருந்தாலும் சரி அவரின் குருநாதர் பாலச்சந்தராக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் தப்புன்னா தப்புதான். எங்கள் படம் ஷூட்டிங் நடந்துட்டு இருக்கு அதில் மாதுரி என்ற ஒரு நடிகை நடித்துக்கொண்டிருந்தார். அப்போது மும்பையில் ரஜினிகாந்த் படம் ஷூட்டிங் நடந்துட்டு இருக்கு.

எங்கள் ஷூட்டிங்கை முடித்து மாதுரி வீட்டுக்கு சென்றவுடன் தயாரிப்பாளர் பிரமீட் நடராஜன் மாதுரியை டிக்கெட் எடுத்து மும்பைக்கு ரஜினி பட ஷூட்டிங்கிற்கு அனுப்பி விட்டார். அப்போது மாதுரி விசு சார் படம் என்று சொல்லும்போது விசு நம்ம ஆளு நான் பேசிக்கிறேன். நீங்க கௌம்புங்க என்று சொல்லி அனுப்பிவிட்டார். காலையில் ஷூட்டிங் தொடங்கும்போது பிரமீட் நடராஜன் விசுவுக்கு போன் செய்து அந்த பெண்ணை மும்பைக்கு அனுப்பிவிட்டதாக சொன்னார். அதை கேட்ட விசு யாரை கேட்டு அனுப்புனீங்க என்று கேட்க, ரஜினி காமினேஷன் அதான் அனுப்பினேன் என்று சொன்னார்

ரஜினி காமினேஷ்னா நாங்களாம் படம் எடுக்கலையா? நாங்கலாம் நடிக்கலயா? திரைப்பட துறையில் நாங்கள் இல்லையா என்று கேட்டு ரஜினி கூட காமினேஷன் என்றால் கேட்காமலே கூட்டிட்டு போய்டுவீங்களா என்று கேட்டு நீங்கள் பண்ணது தப்பு என்று சொல்லிவிட்டு போனை கட் பண்ணிட்டார். அதன்பிறகு அன்றைக்கு ஷூட்டிங் நடத்த விருப்பம் இல்லை என்று கூறி பேக்கப் என்று சொல்லிவிட்டார்.

அதன்பிறகு பிரமீட் நடராஜன் பாலச்சந்தரிடம் சொன்னபோது அவர் விசுவுக்கு போன் செய்தார். போனை எடுத்ததும் விசு நான் பாலச்சந்தர் பேசுகிறேன் என்று சொல்ல சார் அந்த பெண்ணை பற்றி பேசுவதாக இருந்தால் பேச வேண்டாம் சார் என்று சொல்லிவிட்டார். அதற்கு பாலச்சந்தர் அந்த பொண்ணு விஷயம் தான் என்று சொல்ல அப்போ நீங்க பேசவே வேண்டாம் சார் என்று சொல்லி போனை கட் செய்துவிட்டார். அந்த அளவிற்கு கோபக்காரர் விசு என்று டெல்லி கணேஷ் கூறியுள்ளார்.
 

Leave a Reply