• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கருணாநிதியால் காணாமல் போன வாட்ச்... எம்.ஜி.ஆர் சொன்ன அந்த வார்த்தை : என்ன நட்பு!

சினிமா

திமுகவில் இருந்து பிரிந்து வந்த எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கிய ஆட்சியை பிடித்தார்.

சினிமா, அரசியல், இலக்கியம் என தனது கால்பதித்த இடங்களில் எல்லாம் தனது ஆளுமையை செலுத்தியவர் கலைஞர் கருணாநிதி. சினிமாவில் கால்பதித்து அதன்பிறகு அரசியலில் காலூன்றி தமிழகத்தின் முதல்வராக இருந்து சாதனை படைத்த கருணாநிதி, பல படங்களுக்கு தனது வசனத்தின் மூலம் உயிர் கொடுத்துள்ளார். அதேபோல் தனது சமூகநீதி சிந்தனை சார்ந்த வசனங்கள் மூலம் தூங்கிக்கொண்டிருந்த சமூகத்தை தட்டி எழுப்பிய பெருமையும் அவருக்கு உண்டு.

தமிழ் சினிமாவின் அடையாளமாக இன்றும் பார்க்கப்படும் படமாக பராசக்தி படத்தில் சிவாஜி பேசிய அத்தனை வசனங்களும் கைத்தட்டல்களை பெற்றது. சினிமாவில் ஒரு வசனகர்த்தாவுக்கு ரசிகர்கள் இருந்தார்கள் என்றால்’ அது கலைஞர் கருணாநிதி தான். பராசக்தி படத்தில் இவர் எழுதிய வசனத்திற்கு எதிராக இன்றைய காங்கிரஸ் கட்சி எதிர் தீர்மானம் கொண்டு வந்த நிகழ்வுகள் எல்லாம் வரலாற்றில் மறக்க முடியாத தருணங்கள் என்று சொல்லலாம்.

தற்போது தமிழகத்தின் இரு பெரும் திராவிட கட்சிகளாக உருவெடுத்துள்ள திமுக அதிமுக என இரு கட்சிகளும் ஒரு காலத்தில் ஒன்றாகத்தான் இருந்தது. பெரியாரிடம் இருந்து பிரிந்து வந்த அண்ணா திமுகவை தோற்றுவித்தார். இந்த கட்சியில் எம்.ஜி.ஆர் கருணாநிதி இருவரும் முக்கிய பொறுப்புகளில் இருந்தனர். அப்போது அண்ணா இறந்துவிட்டதால் கருணாநிதி முதல் பதவியில் அமர்ந்தார்.

அதன்பிறகு திமுகவில் இருந்து பிரிந்து வந்த எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கிய ஆட்சியை பிடித்தார். அரசியல் ரீதியாக இருவருக்கும் இடையே போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் எம்.ஜி.ஆர் கருணாநிதி இருவரும் நெருங்கிய நண்பர்களாகத்தான் இருந்தனர். இருவரும் ஒருவருக்கு ஒருவர் அளவுகடந்த மரியாதையும் பாசமும் வைத்திருந்தனர்.

எத்தனையோ போராட்டங்களில் பங்கேற்று அதற்காக சிறை சென்றுள்ள கருணாநிதி,  நடத்திய கல்லக்குடி போராட்டம் பெரும் கவனத்தை ஈர்த்தது. டால்மியாபுரம் என்ற பெயரை கல்லக்குடி என்று மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில், தண்டவாளத்தில் தலைவைத்து படுத்த கருணாநிதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்காக 6 மாதங்கள் சிறையில் இருந்த அவர் விடுதலையாகி சென்னை எழும்பூருக்கு வரும் போது அவரை வரவேற்க பலர் காத்திருந்தனர். அதனால் அந்த கூட்டத்தில் இருந்து வெளியே செல்ல கருணாநிதி திணறிப்போனார். அப்போது அங்கு வந்த எம்.ஜி.ஆர் எதைப்பற்றியும் யோசிக்காமல் கருணாநிதியை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு போனபோது எம்.ஜி.ஆர் அணிந்திருந்த விலை உயர்ந்த வாட்சை ஒருவர் திருடி விட்டார்.

இதை கவனிக்காத எம்.ஜி.ஆர் கருணாநிதியை வெளியில் அழைத்து வந்து காரில் ஏறியபோது கையில் வாட்ச் இல்லை. இதை கவனித்த கருணாநிதி என்னயா உன் விலை உயர்ந்த வாட்ச்சை காணவில்லை என்று கேட்க, அதற்கு எம்.ஜிஆர் அது போனா போகட்டும் அரைத விட விலை உயர்ந்த மனிதன்யா நீ என்று புகழ்ந்து பேசியுள்ளார். இருவர் ஆரம்பித்த கட்சிகளும் தற்போது எதிர் எதிராக அரசியல் செய்தாலும் அப்போதைய இவர்களின் நட்பு இன்றும் போற்றப்படுகிறது
 

Leave a Reply