• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இன்றும் ரசிக்க வைக்கும் நெஞ்சம் மறப்பதில்லை மறுபிறவியை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்

சினிமா

பெரும்பாலான திரைப்படங்களில் காதலர்கள் பிரியும் நேரத்தில் சொல்லிக் கொள்ளும் வசனம் " இந்த ஜென்மத்தில் இல்லையென்றாலும் அடுத்த ஜென்மத்திலாவது ஒன்று சேருவோம் என்பதே" அந்த வகையில் மறு பிறவி இருக்கோ இல்லையோ ஆனால் பலரும் அதை நம்பி வருகின்றனர். 
அந்த வகையில் மறு பிறவி கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "நெஞ்சம் மறப்பதில்லை"  என்ற படத்தை நாம் யாரும் அவ்வளவு சீக்கிரம்  மறந்திருக்க மாட்டோம்.
அந்தப் படத்தின் நினைவலைகளை கொஞ்சம் ஒளிரவிட்டு , அவற்றின் சிறப்பம்சங்களையும் சற்று ஆராய்ந்து பார்க்கலாம். 
1963 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான  அமானுஷ்ய காதல் திரைப்படமான "நெஞ்சம் மறப்பதில்லை" படத்தை  இயக்கியவர் , இயக்குனர் ஸ்ரீதர் .
இப்படத்தில் கல்யாண் குமார் மற்றும் தேவிகா ஜோடியாக நடித்துள்ளனர்.இவர்களின் காதல் கட்சிகள் எல்லாம் அளவோடும், அழகோடும் அமைந்திருக்கும்.  
 எம்.என்.நம்பியார் , எஸ்.வி.சஹஸ்ரநாமம் , நாகேஷ் , பத்மினி, பிரியதர்ஷினி மற்றும் மனோரமா ஆகியோர் துணை வேடங்களில் நடித்து ,இப்படத்தை மேலும் மெருகேற்றி விட்டனர்.
 பாழடைந்த அரண்மனையை  ஆராயும் போது , அவனது கடந்தகால வாழ்க்கையைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளும் ஒரு கல்லூரிப் பையனை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது தான் இந்த திரைப்படம் .
 1935 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி, தி ஹிந்து நாளிதழில் , டெல்லியைச் சேர்ந்த சாந்தா தேவி என்ற ஒன்பது வயது சிறுமியைப் பற்றிய ஒரு செய்திக் கட்டுரை இருந்தது , அவர் மதுரா நகரில் வாழ்ந்த தனது கடந்தகால வாழ்க்கை பற்றிய அனைத்து விவரங்களையும் நினைவில் வைத்திருப்பதாகக் கூறினார் . 
1939 ஆம் ஆண்டு கேரளா மற்றும் ராஜஸ்தானில் உள்ள செய்தித்தாள்கள் இதே போன்ற செய்தி அறிக்கைகளை வெளியிட்டன. 
இயக்குனர் ஸ்ரீதர் இந்த செய்திகள் மற்றும் அமெரிக்க திரைப்படமான கேஸ்லைட் (1944) ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார் .
எனவே, 
மறுபிறவியின் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டுதான் "நெஞ்சம் மறப்பதில்லை" என்னும் படத்தை அவர் இயக்கியுள்ளார்.

 இந்தப் படத்தில் ஸ்ரீதரின் தம்பி சி.வி. ராஜேந்திரன்  இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.இது MS காசி தனது பேனரின் கீழ் மனோகர் பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கப்பட்டது. 
விஸ்வநாதன்-ராமமூர்த்தி இரட்டையர்களால் இசையமைக்கப்பட்டது ,A. வின்சென்ட்டின் ஒளிப்பதிவு மற்றும் NM சங்கர் எடிட்டிங் செய்திருந்தார். கண்ணதாசன் பாடல் வரிகளை அவரது மருமகன் பஞ்சு அருணாசலம் எழுதியுள்ளார்.
இப்படத்தில் தலைப்புப் பாடல் நான்கும் வெவ்வேறு பதிப்புகளில் உள்ளது. ஒரு ஆண் பதிப்பு, ஒரு பெண் பதிப்பு மற்றும் இரண்டு டூயட் பதிப்புகள் - ஒன்று மகிழ்ச்சி மற்றொன்று சோகம் . அனைத்து பாடல்களையும் இசையமைக்க கிட்டத்தட்ட  ஆறு மாதங்கள் ஆனதாம்.
 அதிலும் பிபி.ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ் ஜானகி அவர்கள் பாடிய "அழகுக்கும் மலருக்கும்" பாடல் மிகவும் பிரபலமடைந்தது.
நெஞ்சம் மறப்பதில்லை 2 ஆகஸ்ட் 1963 அன்று வெளியானது. வணிக ரீதியாக இப்படம் வெற்றிபெறவில்லை என்றாலும் ,தமிழ் சினிமாவில் வழிபாட்டு அந்தஸ்தைப் பெற்றது.
இயக்குனர் அமீர் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று "நெஞ்சம் மறப்பதில்லை" என்று பாராட்டி கூறியிருப்பார்.
இவரைப் போலவே எம்.என் நம்பியார் மற்றும் இன்னும் பல திரையுலக மக்களும் இந்த படத்தை பாராட்டி உள்ளனர். 
2013-ம் ஆண்டு இத்திரைப்படத்தின் மறு ஆக்க உரிமையை இயக்குனர் செல்வராகவன் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது .

 

Leave a Reply