• Welcome to TamilsGuide
செய்திகள் 1

33 முறை நேரடியாக மோதிய விஜயகாந்த்- பிரபு- யாருக்கு எத்தனை முறை வெற்றி?

சினிமா

தமிழ் சினிமாவில் பல சாதனைகளை படைத்த கேப்டன் விஜயகாந்த் மற்றும் இளையதிலகம் பிரபு ஆகியோரின் படங்கள் இதுவரை 33 முறை ஒன்றாக வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு நடிகருக்கு மற்றொரு நடிகர் போட்டியாக இருந்துள்ளார். எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினிகாந்த் – கமல்ஹாசன், விஜய் – அஜித், விக்ரம் சூர்யா என போட்டி நடிகர்கள் இருந்தாலும், இவர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர்களும் இருக்கிறார்கள். இந்த போட்டி நடிகர்கள் இல்லாமல் இவர்களுக்கு டஃப் கொடுத்த நடிகர்களின் படங்கள் ஒன்றாக வெளியாகும் போதும் பரபரப்பு இருந்துள்ளது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல சாதனைகளை படைத்த கேப்டன் விஜயகாந்த் மற்றும் இளையதிலகம் பிரபு ஆகியோரின் படங்கள் இதுவரை 33 முறை ஒன்றாக வெளியாகியுள்ளது. இதில் யாருக்கு எத்தனை படங்கள் வெற்றி?
நல்ல நாள் – கைராசிக்காரன் (1984)
1984-ம் ஆண்டு விஜயகாந்த் தியாகராஜன் நளினி ஆகியோரின் நடிப்பில் வெளியான நல்ல நாள் பிரபு நடிப்பில் வெளியான கைராசிக்காரன் என்ற படமுமம் ஒன்றாக வெளியானது. இதில் நல்லநாள் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கைராசிக்காரன் திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது.
வைதேகி காத்திருந்தாள் – வம்ச விளக்கு (1984)
1984-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வைதேகி காத்திருந்தாள் மற்றும் பிரபு நடிப்பில் வம்ச விளக்கு உள்ளிட்ட படங்கள் வெளியானது. இதில் வைதேகி காத்திருந்தாள் படம் பெரிய வெற்றியை கொடுத்தது. பிரபுவுக்கு வம்ச விளக்கு படம் சுமாரான வரவேற்பை கொடுத்தது.
ராமன் ஸ்ரீராமன் – நீதியின் நிழல் (1985)
1985-ம் ஆண்டு வெளியான இந்த இரு படங்களுமே சுமாரான வரவேற்பை பெற்றது.
புதிய சகாப்தம் – நேர்மை
1985-ம் ஆண்டு வெளியன இந்த இரு படங்களில் புதிய சகாப்தம் வெற்றிப்படமாக அமைந்த நிலையில், நேர்மமை திரைப்படம் பிரபுவுக்கு ஒரு சுமாரான வெற்றியை கொடுத்தது.
கரிமே: கருவாயன் – சாதனை
1986-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் கரிமேடு கருவாயன் திரைப்படம் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்த நிலையில், பிரபுவின் சாதனை திரைப்படம் சுமாரன வெற்றியை கொடுத்தது.
தழுவாத கைகள் மற்றும் தர்ம தேவதை – பாலைவன ரோஜாக்கள் அறுவடைநாள்
1986-ம் ஆண்டு வெளியான இந்த 4 படங்களுமே பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது.
வேலுண்டு வினையில்லை – மேகம் கருத்திருக்கு
1987-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் வேலுண்டு வினையில்லை பிரபுவின் மேகம் கருத்திருக்கு என 2 படங்களுமே சுமாரான வெற்றியை பெற்றது.
வீரபாண்டியன் – சின்னப்பூவே மெல்ல பேசு
1987-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் வீரபாண்டியன் திரைப்படம் சுமான படமாக அமைந்த நிலையில், பிரபுவின் சின்னபூவே மெல்ல பேசு என்ற படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
சட்டம் ஒரு விளையாட்டு, உழவன் மகன் – இவர்கள் வருங்காலதூண்கள்
1987-ம் ஆண்டு வெளியான இந்த படங்களில் விஜயகாந்தின் சட்டம் ஒரு விளையாட்டு, உழவன் மகன் ஆகிய இரண்டு படங்களுமே வெற்றிப்படமாக அமைந்த நிலையில், பிரபுவுக்கு சுமாரான வெற்றி கிடைத்தது.
உள்ளத்தில் நல்ல உள்ளம் – குரு சிஷயன், அக்னி நட்சத்திரம்
1988-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் உள்ளத்தில் நல்ல உள்ளம் திபை்படமும், பிரபுவின் குரு சிஷ்யன் அக்னி நட்சத்திரம் படங்களில் பிரபுவுக்கு வெள்ளி விழா படங்களாக அமைந்த நிலையில், விஜயகாந்தக்கு ஒரு சுமாரான வெற்றியே கிடைத்தது.
தம்பி தங்க கம்பி – என் தங்கச்சி படிச்சவ
1988-ம் ஆண்டு வெளியான இந்த இரு படங்களுமே வெற்றிப்படங்களாக அமைந்தது.
செந்தூர பூவே – தர்மத்தின் தலைவன்
1988-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் செந்தூர பூவே ரஜினிகாந்த் பிரபு இணைந்து நடித்த தர்மத்தின் தலைவன் என இரு படங்களுமே வெற்றிப்படங்களாக அமைந்தது.
உழைத்து வாழ வேண்டும் – கலியுகம், பூவிழி ராஜா  
1988-ம ஆண்டு வெளியான உழைத்து வாழ வேண்டும் திரைப்படம் ஒரு சுமாரான வெற்றி பெற்ற நிலையில் , பிரபுவின் கலியுகம், பூவிழி ராஜா ஆகிய 2 படங்களுமே தோல்வியை தழுவியது.

தர்மம் வெல்லும், ராஜ நடை – வெற்றி விழா
1989-ம் ஆண்டு வெளியான இந்த 3 படங்களுமே வெற்றி திரைப்படங்களாக அமைந்தது
மீனாட்சி திருவிளையாடல் – வெற்றிமேல் வெற்றி
1989-ம் ஆண்டு வெளியான இந்த இரு படங்களில் விஜயகாந்தின் மீனாட்சி திருவிளையாடல் படம் நல்ல வரவேற்பை பெற்றது. பிரபுவின் வெற்றிமேல் வெற்றி ஒரு சுமாரான வெற்றி.
புலன் விசாரணை – காவலுக்கு கெட்டிக்காரன், நல்ல நேரம் பொறந்தாச்சு
1991-ம் ஆண்டு வெளியான இந்த இரு படங்களில் விஜயகாந்தின் புலன் விசாரணை பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில்,  பிரபுவுக்கு 2 படங்களுமே சுமாரான வெற்றியை மட்டுமே கொடுத்தது.
கேப்டன் பிரபாகரன் – சின்னத்தம்பி
1991-ம் ஆண்டு வெளியான இந்த இரு படங்களுமே பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது.
மாநகர காவல் – ஆயுள் கைதி
1991-ம் ஆண்டு வெளியான இந்த இரு படங்களில் விஜயகாந்தின் மாநகர காவல் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், ஆயுள் கைதி சுமாரன வெற்றியை கொடுத்தது.
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் – தாலாட்டு கேக்குதம்மத
1991-ம் ஆண்டு வெளியான இந்த படங்களில் இரண்டு படங்களுமே வெற்றிப்படமாக அமைந்தது.
சின்னக்கவுண்டர் – பாண்டித்துரை
1992-ம் ஆண்டு வெளியான இந்த படங்களில் விஜயகாந்தின் சின்னக்கவுண்டர் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்த நிலையில், பிரபுவின் பாண்டித்துறை சுமாரான வெற்றி
காவிய தலைவன் – செந்தமிழ் பாட்டு
1991-ம் ஆண்டு வெளியான இந்த படங்களில் செந்தமிழ்பாட்டு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், காவிய தலைவன் சுமாரான வரவேற்பை பெற்றது.
கோவில் காளை – சின்ன மாப்பிள்ளை
1992-ம் ஆண்டு வெளியான இந்த இரு படங்களுமே சுமாரன வெற்றியை பெற்றது.
எங்க முதலாளி – உழவன்
1993-ம் ஆண்டு வெளியான இந்த இரு படங்களுமே சுமாரான வெற்றியை பெற்றது.
சேதுபதி ஐபிஎஸ் – ராஜகுமாரன்
1994-ம் ஆண்டு வெளியான இந்த படங்களில் விஜயகாந்தின் சேதுபதி ஐபிஎஸ் திபை்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ராஜகுமாரன் திரைப்படம் வெற்றிதான் என்றாலும் சேதுபதி ஐபிஎஸ் படத்திற்கு இணையாக வெற்றி இல்லை.
பெரிய மருது – ஜல்லிக்கட்டு காளை
1994-ம் ஆண்டு வெளியான இந்த படங்களில் விஜயகாந்தின் பெரிய மருது ஒரு சுமாரான வெற்றிப்படமாக அமைந்த நிலையில் பிரபுவின் ஜல்லிக்கட்டு காளை ஒரு தோல்விப்படமாக அமைந்தது.
கருப்பு நிலா – கட்டுமரக்காரன்
1995-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் கருப்புநிலா சுமாரான வெற்றியை பெற்றாலும் கட்டுமரக்காரன் திரைப்படம் பிரபுவுக்கு வெற்றியை கொடுத்தது.
திருமூர்த்தி – சின்ன வாத்தியார்
1995-ம் ஆண்டு வெளியான இந்த இரு படங்களுமே சுமாரான வெற்றியை பெற்றது.
தாயகம் – பரம்பரை
1996-ம் ஆண்டு வெளியான இந்த இரு படங்களில் பரம்பரை பெரிய வெற்றிபடமாக அமைந்த நிலையில், தாயகம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அலெக்சாண்டர் – பாஞ்சாலங்குறிச்சி
1996-ம் ஆண்டு வெளியான இந்த படங்களில் விஜயகாந்தின் அலெக்சாண்டர் வெற்றிப்படமாக அமைந்த நிலையில் பிரபுவின் பாஞ்சாலங்குறிச்சி சுமாரான வெற்றியை கொடுத்தது.
தர்ம சக்கரம் – பெரிய தம்பி
1997-ம் ஆண்டு வெளியான இந்த இரு படங்களுமே சுமாரான வெற்றியை பெற்றது.
உளவுத்துறை – பொன்மனம்
1998-ம் ஆண்டு வெளியான இந்த படங்களில் விஜயகாந்தின் உளவுத்துறை திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
வீரம் வௌஞ்ச மண்ணு – என் உயிர் நீதானே
1998-ம் ஆண்டு வெளியான இந்த படங்களில் விஜயகாந்தின் வீரம் வௌஞ்ச மண்ணு திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில், பிரபுவுக்கு தோல்வி கிடைத்தது.
வானத்தைபோல – திருநெல்வேலி
2000-ம் ஆண்டு வெளியான இந்த படங்களில் பிரபுவின் திருநெல்வேலி வரவேற்பை பெற்ற நிலையில், விஜயகாந்தின் வானத்தைபோல திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

Leave a Reply