• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாடலில் சர்ச்சை வார்த்தை... பதிவுக்கு முன்பே கணித்த எம்.ஜி.ஆர் : இதயக்கனிக்கு வந்த சோதனை

இலங்கை

இதயக்கனி படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பஞ்சாபி நடிகை, ராதா சலூஜா நடித்திருப்பார்.

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான இதயக்கனி படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், சர்ச்சைக்குரிய வார்த்தையை முன்பே கணித்து அந்த வார்த்தையை நீக்கி பாடல் பதிவை நடத்தியுள்ளார்.

எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1975-ம் ஆண்டு வெளியான படம் இதயக்கனி. ஒரு எஸ்டேட் முதலாளியான எம்.ஜி.ஆர் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அங்கு வேலை செய்யும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வார். திருமணத்திற்கு பின் அந்த பெண் ஒரு கொலைகாரி என்று தெரியவர, நடந்த உண்மை என்ன? தனது மனைவி யார் என்று கண்டுபிடிப்பதே இந்த படத்தின் கதை.

இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பஞ்சாபி நடிகை, ராதா சலூஜா நடித்திருப்பார். மேலும் தேங்காய் சீனிவாசன், மனோகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். புலமை பித்தன், வாலி உள்ளிட்டோர் இந்த படத்திற்கு பாடல்கள் எழுதியிருந்தனர். இதில் இடம் பெற்ற இன்பமே உந்தன் பேர் பெண்மையோ என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த பாடலை கவிஞர் புலமை பித்தன் எழுதியிருந்தார். இந்த பாடலில் ஒரு வார்த்தையை சர்ச்சையாகும் என்று நினைத்த எம்.ஜி.ஆர், உடனடியாக கவிஞர் புலமைபித்தனிடம் சொல்லி மாற்றியமைத்துள்ளார். இதில் வரும் 2-வது வரியான இன்பமே உந்தன் பேர் பெண்மையோ என்பதற்கு பதிலாக, ஆண்மையோ என்று எழுதியுள்ளார். இதற்கு பேர் ஆண்மையோ அல்லது பேராண்மையோ என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் இந்த பாடலை படித்து பார்த்த எம்.ஜி.ஆர் ஆண்மை என்றால் வேறொரு சொல்லையும் குறிக்கும், கேள்வி கேட்கும் வகையில் இருக்கிறது. இதை வைத்தால் பின்னாளில் ஏதாவது சர்ச்சை வரலாம் என்று யோசித்த எம்.ஜி.ஆர், இந்த சொல்லை மாற்றுங்கள் என்று கூறியுள்ளார். அதன்பிறகு தான் இன்பமே உந்தன் பேர் பெண்மையோ என்று முதல் வரியும், இன்பமே உந்தன் பேர் வள்ளலோ என்று 2-வது வரியும் மாற்றப்பட்டுள்ளது.

இந்த பாடல் எதுகை மோனை சிக்கலாக இருந்தாலும், பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு பாடலாக இன்றும் பலராலும் பாடப்பட்டு வருகிறது.

Leave a Reply