• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் பணவீக்கம்

இலங்கை

இந்த நாடு ஜனவரி மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 7 விகிதமாக உயரக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்படி பெறுமதி சேர் வரி மற்றும் பிற வெளிப்புற காரணிகளின் பணவீக்கம் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் வட் வரி திருத்த சட்டம் டிசம்பர் 11 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு இந்த ஆண்டு ஜனவரி முதல் வட் வரி 15 விகிதத்தில் இருந்து 18 விகிதமாக 3 விகிதம் அதிகரிக்கப்பட்டது.

இந்த நேரத்தில்சந்தை வட்டி விகிதங்களை ஏதேனும் ஒரு வகையில் சரிசெய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் வட்டி விகிதங்கள் நிலையானதாக பேணி  எதிர்காலத்தில் மறுபரிசீலனை செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 

Leave a Reply