• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகள் தொடர்பில் நடவடிக்கை

இலங்கை

வன விலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதங்களை கட்டுப்படுத்த விவசாயிகள் முன்வைத்த யோசனையை எதிர்காலத்தில் பரிசீலித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வன விலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்க பல்வேறு தரப்பினரிடம் மாற்று யோசனைகள் கோரப்பட்ட போதிலும் இதுவரை சாதகமான முன்மொழிவுகள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, வன விலங்குகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்க விவசாயிகள் முன்வைக்கும் முன்மொழிவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளின் எண்ணிக்கையை குறைக்க துரித வேலைத்திட்டத்தை தயாரிக்கத் தவறினால், வெடிமருந்துகள் வழங்கும் சட்டத்தில் திருத்தம் செய்து, பயிர்களை பாதுகாக்க துப்பாக்கிகளை வழங்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், தற்போது ஐந்து ஏக்கருக்கும் அதிகமான பண்ணைகளுக்கு வெடிமருந்துகளுக்கான உரிமம் வழங்கப்படுவதாக விவசாயிகள் முன்னிலையில் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply