• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எனக்கு மறுபிறவி இருந்தால்... இந்த நடிகைக்கு சகோதரன் ஆகணும் 

சினிமா

எனக்கு மறுபிறவி இருந்தால்... இந்த நடிகைக்கு சகோதரன் ஆகணும் : கண்ணதாசன் சொன்ன அந்த நடிகை யார்? எனக்கு மறுபிறவி இருந்தால் இந்த நடிகைக்கு சகோதரனாக பிறக்க வேண்டும் என்று கவியரசர் கண்ணதாசன் விரும்பியுள்ளார். தமிழ் சினிமாவில் தனது பாடல்கள் மூலம் இன்றுவரை மக்கள் மத்தியில் நிலைத்திருக்கும் கவியரசர் கண்ணதாசன், தனக்கு மறுபிறவி என்று ஒன்று இருந்தால், இந்த நடிகைக்கு சகோதரனாக பிறக்க வேண்டும் என்று ஒரு பத்திரிக்கை பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். சினிமா பாடல்கள் மூலம் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்ட முக்கிய கவிஞர் கண்ணதாசன். சாதாரணமாக இல்லாமல் தன் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள் கஷ்டங்கள், மகிழ்ச்சி என அத்தனை உணர்ச்சிகளையும் பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய கண்ணதாசன், இயக்குனர் தயாரிப்பாளர், கதாசிரியர், உள்ளிட்ட பல திறமைகளை உள்ளடக்கி இருந்தார்.

அதேபோல் மனித வாழ்க்கையின் அத்தனை உணர்ச்சிகளையும் பாடலாக வெளிப்படுத்தியுள்ள கண்ணதாசனின் வரிகள் விரக்தியில் உள்ள அனைவருக்கும் ஆறுதலாகவும், மகிழ்ச்சியில் உள்ள பலருக்கும் மேலும் மகிழ்ச்சியை தரக்கூடியதாகவும் உள்ளது. அதேபோல் க்ளாசிக் சினிமாவை எடுத்துக்கொண்டால் கண்ணதாசனின் பாடல்கள் தனி இடம் பிடித்திருக்கும் என்ற நிலை இன்றளவும் உள்ளது.

பாடல், கட்டுரை, கதை, திரைக்கதை, படம் இயக்குவது, தயாரிப்பாளர் என பன்முறை திறமை கொண்ட கவியரசர் கண்ணதாசன், தனது வரிகள் மூலம் பலரின் சோகங்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார் என்று சொல்லலாம். அப்படி மனித உணர்வுகளை வைத்து பாடல்கள எழுதிய கண்ணதாசன், தான் அடுத்த ஜென்மத்தில் இந்த நடிகைக்கு சகோதரனாக பிறக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த நடிகை வேறு யாரும் இல்லை நடிகை டி.ஆர்.ராஜகுமாரி தான். தஞ்சை மாவட்டத்தில் 1922-ம் ஆண்டு பிறந்த இவர், தனது 13 வயதில் 1935-ம் ஆண்டு, கார்வான் ஈ கயாத் என்ற இந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு, 1939-ம் ஆண்டு வெளியான குமர குலோத்துங்கன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள டி.ஆர்.ராஜகுமாரி கடைசியாக 1963-ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் பெரிய இடத்து பெண் என்ற படத்தில் நடித்திருந்தார். இதுவே அவர் தமிழில் நடித்த கடைசி படமாகும் இந்த படத்தை டி.ஆர்.ராஜகுமாரியின் சகோதரர் டி.ஆர்.ராமண்ணா இயக்கியிருந்தார். 1948-ம் ஆண்டு வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறிந்த ஒரு நடிகையாக மாறிய டி.ஆர்.ராஜகுமாரி, எம்.ஜி.ஆர் சிவாஜி ஆகிய இருவருடனும் மிகுந்த நட்புடன் பழகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply